/உள்ளூர் செய்திகள்/தூத்துக்குடி/ போட்டோ ஸ்டூடியோ ரூ.60,000 வழங்க உத்தரவு போட்டோ ஸ்டூடியோ ரூ.60,000 வழங்க உத்தரவு
போட்டோ ஸ்டூடியோ ரூ.60,000 வழங்க உத்தரவு
போட்டோ ஸ்டூடியோ ரூ.60,000 வழங்க உத்தரவு
போட்டோ ஸ்டூடியோ ரூ.60,000 வழங்க உத்தரவு
ADDED : ஜூலை 18, 2024 07:37 PM
துாத்துக்குடி:துாத்துக்குடி மாவட்டம், உடன்குடி கிறிஸ்டியான் நகரைச் சேர்ந்த சாம்பசிவ மூர்த்தி என்பவர் நிச்சயதார்த்தம் மற்றும் திருமணம் ஆகியவற்றிற்கு போட்டோ மற்றும் வீடியோ எடுக்க மதுரையைச் சேர்ந்த ஒரு போட்டோ ஸ்டுடியோ கடைக்காரரிடம் அட்வான்ஸ் கொடுத்து இருந்தார்.
முழுத் தொகையையும் செலுத்தினால் தான் நிகழ்ச்சிகளில் எடுக்கப்பட்ட போட்டோ, வீடியோவை தருவதாக கடைக்காரர் கூறினார். இதனால், முழு தொகையையும் சாம்பசிவ மூர்த்தி செலுத்தி விட்டார். அவர் கொடுத்த போட்டோக்கள் தெளிவில்லாமல் இருந்தன. இதனால், அதிர்ச்சியடைந்த சாம்பசிவ மூர்த்தி, வழக்கறிஞர் மூலம் நோட்டீஸ் அனுப்பினார். மேலும், துாத்துக்குடி மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணையத்திலும் வழக்கு தொடர்ந்தார்.
வழக்கை விசாரித்த நுகர்வோர் குறைதீர் ஆணைய தலைவர் திருநீலபிரசாத், உறுப்பினர்கள் சங்கர், நமச்சிவாயம் ஆகியோர், 60,000 ரூபாயை இரு மாத காலத்திற்குள் வழங்க வேண்டும் என போட்டோ ஸ்டூடியோ உரிமையாளருக்கு உத்தரவிட்டனர்.