/உள்ளூர் செய்திகள்/தூத்துக்குடி/ நேரத்திற்கு திறப்பது இல்லை நாயுடன், ஓனர் சாலை மறியல் நேரத்திற்கு திறப்பது இல்லை நாயுடன், ஓனர் சாலை மறியல்
நேரத்திற்கு திறப்பது இல்லை நாயுடன், ஓனர் சாலை மறியல்
நேரத்திற்கு திறப்பது இல்லை நாயுடன், ஓனர் சாலை மறியல்
நேரத்திற்கு திறப்பது இல்லை நாயுடன், ஓனர் சாலை மறியல்
ADDED : ஜூலை 23, 2024 07:57 PM

துாத்துக்குடி:துாத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி ஸ்டாலின் காலனி பகுதியைச் சேர்ந்தவர் கோபால். வீட்டில் நாய் ஒன்றை வளர்க்கிறார். அந்த நாய்க்கு தடுப்பு ஊசி போடுவதற்காக கோவில்பட்டி -- எட்டையபுரம் சாலையில் உள்ள அரசு கால்நடை மருத்துவமனைக்கு நாயுடன் அவர் நேற்று சென்றார். காலை 8:00 மணிக்கு திறக்கப்பட வேண்டிய கால்நடை மருத்துவமனை 8:30 மணி ஆன பிறகும் திறக்கப்படாதாலும், பணிக்கு யாரும் வராததாலும் கோபால் கோபமடைந்தார். இதையடுத்து, அவர் கையில் நாயை வைத்துக் கொண்டு, திடீரென சாலையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டார்.
கோவில்பட்டி கிழக்கு காவல் நிலைய போலீசார், போராட்டத்தில் ஈடுபட்ட கோபாலிடம் பேச்சு நடத்தினர். ஒரு மணி நேரம் தாமதமாக வந்த கால்நடை மருத்துவமனை ஊழியரிடம், நாய்க்கு தடுப்பூசி செலுத்த வேண்டும் என கோபால் கூறினார்.
'மருந்து இருப்பு இல்லை; வெளியே இருந்து வாங்கி வாருங்கள்' என, ஊழியர்கள் கூறியதால், கோபமடைந்தார், கோபால். அவர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். வளர்ப்பு பிராணிக்காக, கால்நடை மருத்துவமனை முன் சாலையில் அமர்ந்து போராட்டம் நடத்தியதால், அப்பகுதியில் பரபரப்பு நிலவியது.