/உள்ளூர் செய்திகள்/தூத்துக்குடி/ மன உளைச்சலில் இருந்த போலீஸ்காரர் தற்கொலை மன உளைச்சலில் இருந்த போலீஸ்காரர் தற்கொலை
மன உளைச்சலில் இருந்த போலீஸ்காரர் தற்கொலை
மன உளைச்சலில் இருந்த போலீஸ்காரர் தற்கொலை
மன உளைச்சலில் இருந்த போலீஸ்காரர் தற்கொலை
ADDED : ஜூலை 23, 2024 08:37 PM

துாத்துக்குடி,:துாத்துக்குடி மாவட்டம், விளாத்திகுளம் அருகே குளத்துார் பத்திரகாளியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் காசி பாண்டியன், 31. திருச்செந்துார் கோவில் போலீஸ் ஸ்டேஷனில் முதல்நிலை போலீஸ்காரராக பணியாற்றி வந்தார்.
பத்து நாட்களாக உயர் அதிகாரிகளிடம் முறையாக எந்தவித அனுமதியும் பெறாமல் தொடர் விடுப்பில் இருந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில், வீட்டில் இருந்த காசி பாண்டியன் நேற்று திடீரென துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். குளத்துார் போலீசார், அவரது உடலை கைப்பற்றி விசாரிக்கின்றனர்.
போலீசார் கூறுகையில், 'குடும்ப பிரச்னை காரணமாக சில நாட்களாகவே காசி பாண்டியன் மன உளைச்சலில் இருந்துள்ளார். அவருக்கு இன்னும் திருமணமாகவில்லை. பெற்றோர் உப்பள வேலைக்கு சென்றிந்தபோது, தனிமையில் இருந்த அவர் திடீரென தற்கொலை செய்து கொண்டுள்ளார். தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது' என்றனர்.