/உள்ளூர் செய்திகள்/தூத்துக்குடி/ ஆன்லைன் விளம்பரத்தை நம்பி தாய்லாந்து சென்றவர் மாயம் ஆன்லைன் விளம்பரத்தை நம்பி தாய்லாந்து சென்றவர் மாயம்
ஆன்லைன் விளம்பரத்தை நம்பி தாய்லாந்து சென்றவர் மாயம்
ஆன்லைன் விளம்பரத்தை நம்பி தாய்லாந்து சென்றவர் மாயம்
ஆன்லைன் விளம்பரத்தை நம்பி தாய்லாந்து சென்றவர் மாயம்
ADDED : ஜூலை 29, 2024 11:22 PM

துாத்துக்குடி : துாத்துக்குடி மாவட்டம், ஸ்ரீவைகுண்டம் தாலுகா, வெள்ளூரை சேர்ந்தவர் முத்துக்குமார், 32. இவர், வேலைக்காக 22ம் தேதி கிழக்கு ஆசிய நாடான தாய்லாந்து நாட்டுக்கு சென்றார்.
பாங்காக் விமான நிலையம் சென்ற அவர், அங்கிருந்து, 'வாட்ஸாப்'பில் அவரது மனைவி சுந்தரியிடம் பேசினார். அங்கிருந்து ஹோட்டல் அறைக்குச் சென்ற அவர், அதன் பின், எங்கு சென்றார் என தெரியவில்லை; அவரது மனைவியிடமும் பேசவில்லை.
பல முறை தொடர்பு கொள்ள முயன்றும், கண்டுபிடிக்க முடியாததால், துாத்துக்குடி கலெக்டர் அலுவலகத்தில், நேற்று சுந்தரி, தன் 3 வயது பெண் குழந்தையுடன் மனு அளித்தார்.
மனுவில் அவர் கூறியிருப்பதாவது:
கடந்த 22ம் தேதி பாங்காக் விமான நிலையத்தில் இறங்கிய என் கணவர், அதன் பின், காரில் ஹோட்டலுக்கு சென்றார்.
அப்போது அவர், 'நிறுவனத்தில் இருந்து அழைப்பு வந்ததும் செல்வேன்' என, வாட்ஸாப்பில் பேசினார். அது தான் என்னிடம் அவர் பேசிய கடைசி வார்த்தை.
தொடர்ந்து அவரை தொடர்பு கொள்ள முயற்சி செய்த போதிலும், இதுவரை கிடைக்கவில்லை. அவரது நிலை என்ன என தெரியாமல், பெண் குழந்தையுடன் தவிக்கிறேன். அவரை கண்டுபிடித்து தர வேண்டும்.
இவ்வாறு மனுவில் கூறப்பட்டுஉள்ளது.
பாங்காக் விமான நிலையத்தில் இறங்கியதும் முத்துக்குமார் எடுத்த போட்டோ, விமான நிலையத்தில் புதிதாக வாங்கிய சிம் கார்டு, அவர் ஹோட்டல் அறைக்கு செல்ல பயன்படுத்திய கார் எண் போன்ற விபரங்களை, அவரின் குடும்பத்தினர் கலெக்டரிடம் அளித்தனர்.
ஏதேனும் தீவிரவாத கும்பலிடம் சிக்கி இருப்பாரோ என்ற அச்சம் உள்ளதாக அவர்கள் தெரிவித்தனர்.