ADDED : ஜூலை 10, 2024 02:23 AM
தூத்துக்குடி:தூத்துக்குடி அருகே தோட்டத்தில் தொழிலாளி வெட்டிக் கொலை செய்யப்பட்டார்.
தூத்துக்குடி மாவட்டம் சாயர்புரம் அருகே நட்டாத்தியில் ஜான்பால் என்பவருக்கு சொந்தமான தோட்டம் உள்ளது.
இதில் கோட்டைக்காடு கிராமத்தைச்சேர்ந்த சந்திரசேகர் 58, என்பவர் தொழிலாளியாக பணியாற்றினார். தினமும் காலை 9:00 மணிக்கு வேலைக்கு வருபவர், மாலை 6:00 மணிக்கு கிளம்பி செல்வார்.
நேற்று மாலை 5:30 மணிக்கு தோட்டத்தில் அவரை ஒருவர் பார்க்க சென்றபோது தோட்ட அறையில் அவர் வெட்டிக்கொலை செய்யப்பட்டு கிடந்தார்.
சாயர்புரம் போலீசார் அவரது உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். கொலைக்கான காரணம், கொலையாளிகள் குறித்து சாயபுரம் போலீசார் விசாரிக்கின்றனர்.