Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/தூத்துக்குடி/ திருமண விழாவில் ரத்த தானம் காயல்பட்டினத்தில் புதுமை

திருமண விழாவில் ரத்த தானம் காயல்பட்டினத்தில் புதுமை

திருமண விழாவில் ரத்த தானம் காயல்பட்டினத்தில் புதுமை

திருமண விழாவில் ரத்த தானம் காயல்பட்டினத்தில் புதுமை

ADDED : ஜூலை 10, 2024 02:01 AM


Google News
ஆறுமுகநேரி:காயல்பட்டினத்தில் திருமணவிழாவில் ரத்த தான முகாம் நடத்தி அசத்தியுள்ளனர்.

மக்கள் தொகையில் குறைந்தது, 1 சதவீதம் பேர் ரத்த தானம் செய்தால் ரத்தம் தேவை பூர்த்தியாகும் என்ற உலக சுகாதார அமைப்பின் அறிவுறுத்தலின் பேரில் கடந்த 2017ம் ஆண்டு முதல் காயல்பட்டினம் மக்கள் உரிமை நிலை நாட்டல் மற்றும் வழிகாட்டு அமைப்பு, நடப்பது என்ன சமூக ஊடகக்குழுமம் அரசு ரத்த வங்கியுடன் இணைந்து ரத்ததான முகாம்களை நடத்தி வருகிறது. இதுவரை இந்த அமைப்பினர் 35 முகாம்களை நடத்திஉள்ளனர்.

இந்த ஆண்டின் நான்காவது முகாம் திருச்செந்துார் அரசு மருத்துவமனை ரத்த வங்கியுடன் இணைந்து காயல்பட்டினம் மகுதுாம் தெருவில் உள்ள பாயிஸின் சங்கத்தில் மெகா அமைப்பின் செயற்குழு உறுப்பினர் சாளை நவாஸ் மகள் மற்றும் ரத்த கொடையாளர் சதக்கத்துல்லாஹ் மகன் திருமணத்தை முன்னிட்டு நடந்தது.

மணமக்கள் குடும்பத்தினர், நண்பர்கள் உட்பட 55 பேர் ரத்த தானம் செய்தனர். ரத்த தானம் வழங்கியவர்களை தமிழக அரசின் கூடுதல் தலைமைச் செயலரும், சமூகசீர்திருத்த துறை செயலருமான தென்காசி ஜவஹர் பாராட்டி சான்றிதழ் வழங்கினார்.

இதுவரை நடத்தப்பட்டுள்ள 35 முகாம்கள் மூலமாக, 253 பெண்கள் உட்பட 1921 பேர் ரத்த தானம் செய்துள்ளனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us