/உள்ளூர் செய்திகள்/தூத்துக்குடி/ ஒதுக்கி வைக்கப்பட்ட பெண் பஞ்., தலைவர் போலீசில் புகார் மனு ஒதுக்கி வைக்கப்பட்ட பெண் பஞ்., தலைவர் போலீசில் புகார் மனு
ஒதுக்கி வைக்கப்பட்ட பெண் பஞ்., தலைவர் போலீசில் புகார் மனு
ஒதுக்கி வைக்கப்பட்ட பெண் பஞ்., தலைவர் போலீசில் புகார் மனு
ஒதுக்கி வைக்கப்பட்ட பெண் பஞ்., தலைவர் போலீசில் புகார் மனு
ADDED : ஜூலை 24, 2024 10:31 PM
துாத்துக்குடி,:துாத்துக்குடி மாவட்டத்தில் உள்ள மீனவ கிராமங்களில் ஒன்று புன்னக்காயல். இந்த கிராமத்தின் பஞ்., தலைவராக மறக்குடி தெருவை சேர்ந்த சோபியா, 45, என்பவர் உள்ளார். தி.மு.க.,வை சேர்ந்த இவர், தெற்கு மாவட்ட துணைச் செயலராகவும் இருந்தார்.
சோபியாவுக்கும், புன்னக்காயல் ஊர் கமிட்டிக்கும் பிரச்னை ஏற்பட்டது. திருச்செந்துார் தாசில்தார், ஆத்துார் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் தலைமையில், கடந்த 9ம் தேதி சமாதான கூட்டம் நடந்தது. இரு தரப்பினரும் எவ்வித பிரச்னையிலும் ஈடுபடக் கூடாது என முடிவு எடுக்கப்பட்டது.
இதற்கிடையே, ஊர் கமிட்டி தலைவர்கள் சிலர், அரசுக்கு சொந்தமான இடத்தை அளவீடு செய்ததாக கூறப்படுகிறது. அதற்கு சோபியா எதிர்ப்பு தெரிவித்தார். இதையடுத்து, புன்னக்காயலில் நடக்கும் எந்த நிகழ்ச்சிகளிலும் சோபியா கலந்து கொள்ள கூடாது என கூறி, ஊர் கமிட்டி ஒதுக்கி வைத்ததாக, மாவட்டம் முழுவதும் தகவல் பரவியது.
இதுதொடர்பாக, ஆத்துார் காவல் நிலையத்தில் சோபியா புகார் மனு அளித்துள்ளார். ஊரை விட்டு ஒதுக்கி வைப்பது என்ற பழங்கால நடைமுறை தற்போதும் பின்பற்றப்படுவது பலரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.