/உள்ளூர் செய்திகள்/திருவள்ளூர்/ கிருஷ்ணா கால்வாயில் வாலிபர்கள் உற்சாக குளியல் கிருஷ்ணா கால்வாயில் வாலிபர்கள் உற்சாக குளியல்
கிருஷ்ணா கால்வாயில் வாலிபர்கள் உற்சாக குளியல்
கிருஷ்ணா கால்வாயில் வாலிபர்கள் உற்சாக குளியல்
கிருஷ்ணா கால்வாயில் வாலிபர்கள் உற்சாக குளியல்
ADDED : செப் 17, 2025 02:18 AM

திருமழிசை:தண்டலம் பகுதியில் கிருஷ்ணா கால்வாயில் வாலிபர்கள் உற்சாக குளியல் போட்டு வருகின்றனர்.
ஆந்திர மாநிலத்திலிருந்து வரும் கிருஷ்ணா நீர் திருவள்ளூர் மாவட்டம் பூண்டி ஏரிக்கு வருகிறது. இங்கிருந்து கிருஷ்ணா கால்வாய் வழியாக வரும் நீர் அரண்வாயல் வழியாக தண்டலம் பகுதியில் செம்பரம்பாக்கம் ஏரியில் சேகரமாகிறது.
இதில் பூண்டி ஏரியில் இருந்து தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளதால் செம்பரம்பாக்கம் ஏரிக்கு வரும் தண்ணீர் அதிகரித்துள்ளது.
இதனால் சென்னை - பெங்களூரு தேசிய அதிவிரைவு நெடுஞ்சாலை தண்டலம் பகுதியில் உள்ள கிருஷ்ணா கால்வாயில் சுற்றியுள்ள கிராமங்களை சேர்ந்த வாலிபர்கள் 'டைவ்' அடித்து குளித்து வருகின்றனர்.