/உள்ளூர் செய்திகள்/திருவள்ளூர்/ இரவு முழுதும் மின்வெட்டால் அவதி கண்டித்து அச்சரப்பள்ளத்தில் மறியல் இரவு முழுதும் மின்வெட்டால் அவதி கண்டித்து அச்சரப்பள்ளத்தில் மறியல்
இரவு முழுதும் மின்வெட்டால் அவதி கண்டித்து அச்சரப்பள்ளத்தில் மறியல்
இரவு முழுதும் மின்வெட்டால் அவதி கண்டித்து அச்சரப்பள்ளத்தில் மறியல்
இரவு முழுதும் மின்வெட்டால் அவதி கண்டித்து அச்சரப்பள்ளத்தில் மறியல்
ADDED : செப் 17, 2025 02:21 AM

பொன்னேரி:இரவு முழுதும் மின்வெட்டு ஏற்பட்டதால் கிராம மக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
பொன்னேரி அடுத்த அச்சரப்பள்ளம் கிராமத்தில் நேற்று முன்தினம் நள்ளிரவு மின்துண்டிப்பு ஏற்பட்டது.
சிறிது நேரத்தில் வந்துவிடும் என காத்திருந்தவர்கள், நீண்டநேராமாகி மின்சாரம் சீராகாத நிலையில், மெதுார் துணை மின் நிலையத்தை தொடர்பு கொண்டனர்.
அழைப்பை யாரும் பொருட்படுத்தவில்லை. மின்சாரம் இல்லாமல் இரவு முழுதும் பெரும் தவிப்பிற்கு ஆளாகினர்.
நேற்று காலை வரை மின்சாரம் சீராகாத நிலையில், கொதிப்படைந்த கிராம மக்கள் பழவேற்காடு - பொன்னேரி மாநில நெடுஞ்சாலையில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் சிறிது நேரம் போக்குரவத்து பாதித்தது.
தகவல் அறிந்த திருப்பாலைவனம் போலீசார் அங்கு சென்று போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சு நடத்தினர். போலீசாரின் சமாதானத்தை ஏற்று, கிராம மக்கள் மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர்.
மின்வாரிய அதிகாரிகள், ஊழியர்கள் அச்சரப்பள்ளம் கிராமத்திற்கு வரும் பிரதான மின்பாதையில் சீரமைப்பு பணிகளில் ஈடுபட்டனர்.