/உள்ளூர் செய்திகள்/திருவள்ளூர்/ வங்கி ஊழியரிடம் ஏமாந்த பெண்கள்; கலெக்டர் அலுவலகம் முற்றுகை வங்கி ஊழியரிடம் ஏமாந்த பெண்கள்; கலெக்டர் அலுவலகம் முற்றுகை
வங்கி ஊழியரிடம் ஏமாந்த பெண்கள்; கலெக்டர் அலுவலகம் முற்றுகை
வங்கி ஊழியரிடம் ஏமாந்த பெண்கள்; கலெக்டர் அலுவலகம் முற்றுகை
வங்கி ஊழியரிடம் ஏமாந்த பெண்கள்; கலெக்டர் அலுவலகம் முற்றுகை
ADDED : செப் 16, 2025 01:02 AM

திருவள்ளூர்;வங்கியில் செலுத்தி ஏமாந்த பணத்தை திரும்ப வழங்கக்கோரி பாதிக்கப்பட்ட பெண்கள், நேற்று கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.
திருவள்ளூர் அடுத்த மப்பேடு இந்தியன் வங்கி கிளையில், தீபா என்ற பெண் ஒப்பந்த ஊழியராக பணிபுரிந்து வந்தார். இவர், 100 நாள் வேலை திட்டத்தில் பணிபுரியும் பெண்களுக்கு ஊதியம் வழங்கும் பணியை மேற்கொண்டு வந்தார்.
மப்பேடு பகுதியைச் சுற்றியுள்ள கீழச்சேரி, கொண்டஞ்சேரி, கூவம், பாத்திமாபுரம், உளுந்தை உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்தவர்களுக்கு, வங்கியில் பணம் செலுத்த உதவி செய்ததாக கூறப்படுகிறது.
கடந்த 9ம் தேதி தீபா துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதையடுத்து, தீபா மூலம் வங்கியில் செலுத்திய பணம், தங்களது வங்கி கணக்கில் இல்லாமல், மாயமானதாக கூறி வாடிக்கையாளர்கள், சில நாட்களுக்கு முன் வங்கியை முற்றுகையிட்டனர்.
அவர்களிடம் போலீசார் மற்றும் வங்கி நிர்வாகத்தினர் பேச்சு நடத்தி, பணம் திரும்ப கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தனர்.
இந்த நிலையில், வங்கியில் பணம் செலுத்தி ஏமாந்த பெண்கள், 50க்கும் மேற்பட்டோர், நேற்று காலை திருவள்ளூர் கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டனர். பின், 'தாங்கள் வங்கியில் செலுத்தி, ஏமாந்த பணத்தை திருப்பி கொடுக்க வேண்டும்' என, கலெக்டரிடம் மனு அளித்தனர்.