/உள்ளூர் செய்திகள்/திருவள்ளூர்/திடக்கழிவு மேலாண்மை திட்டம் பழவேற்காடில் செயல்படுத்தப்படுமா?திடக்கழிவு மேலாண்மை திட்டம் பழவேற்காடில் செயல்படுத்தப்படுமா?
திடக்கழிவு மேலாண்மை திட்டம் பழவேற்காடில் செயல்படுத்தப்படுமா?
திடக்கழிவு மேலாண்மை திட்டம் பழவேற்காடில் செயல்படுத்தப்படுமா?
திடக்கழிவு மேலாண்மை திட்டம் பழவேற்காடில் செயல்படுத்தப்படுமா?
ADDED : பிப் 24, 2024 07:58 PM

பழவேற்காடு:சுற்றுலாதலமாக விளங்கும் பழவேற்காடு பகுதியை துாய்மையாக வைத்திருக்க, சுற்றுலா மேம்பாடு திட்டத்தின் கீழ் கடந்த, 2009ல், திடக்கழிவு மேலாண்மை திட்டம் கொண்டு வரப்பட்டது.
மக்கும், மக்காத குப்பையை தரம் பிரித்து கையாள்வதற்காக, பழவேற்காடு குளத்துமேடு பகுதியில் கிடங்குகள் கட்டப்பட்டன. மக்கும் குப்பையை உரமாக்கவும், மக்காத கழிவுகளை மறுசுழற்சிக்கு அனுப்பவும் திட்டமிடப்பட்டு பணிகள் மேற்கொள்ளப்பட்டன.
இதுநாள் வரை திட்டம் செயல்பாட்டிற்கு கொண்டு வரப்படாமல் முடங்கிக் கிடப்பதால், குப்பை கழிவுகள் சாலையோரங்களிலும், கழிமுகப்பகுதிகளிலும் கொட்டி குவிக்கப்படுகிறது.
அவ்வப்போது இவை எரிக்கப்படுகிறது. பிளாஸ்டிக் கவர், டம்ளர் உள்ளிட்டவை எரியும்போது துர்நாற்றம் வீசுகிறது.
சுற்றுலா வரும் பயணியர், பழவேற்காடு நுழைவு பகுதிகளில், சாலையோரங்களில் குவிந்திருக்கும் இவற்றை கண்டு முகம் சுளிக்கின்றனர்.
திடக்கழிவு மேலாண் மை திட்டம் செயல்பாடின்றி கிடப்பதால், அதற்காக கட்டப்பட்ட கட்டடங்களும் பயனின்றி வீணாகி வருகிறது. கட்டடங்களை சுற்றிலும் புதர் மண்டி கிடப்பதுடன், குடிகாரர்களின் 'பார்' ஆக மாறி கிடக்கிறது. பழவேற்காடு பகுதியில் திடக்கழிவு மேலாண்மை திட்டத்தை முறையாக செயல்படுத்தி, குப்பை கழிவுகளை முறையாக கையாள வேண்டும் என சமூக ஆர்வலர்கள் எதிர்பார்க்கின்றனர்.