/உள்ளூர் செய்திகள்/திருவள்ளூர்/ கும்மிடி - திருவள்ளூர் இடையே கூடுதல் பஸ்கள் இயக்கப்படுமா? கும்மிடி - திருவள்ளூர் இடையே கூடுதல் பஸ்கள் இயக்கப்படுமா?
கும்மிடி - திருவள்ளூர் இடையே கூடுதல் பஸ்கள் இயக்கப்படுமா?
கும்மிடி - திருவள்ளூர் இடையே கூடுதல் பஸ்கள் இயக்கப்படுமா?
கும்மிடி - திருவள்ளூர் இடையே கூடுதல் பஸ்கள் இயக்கப்படுமா?
ADDED : ஜூன் 01, 2025 09:31 PM
கும்மிடிப்பூண்டி:தொழில் நகரமான கும்மிடிப்பூண்டி பகுதியில் இருந்து அலுவலக வேலை மற்றும் கோரிக்கை தொடர்பாக, தினமும் நுாற்றுக்கணக்கானோர் மாவட்ட தலைநகரான திருவள்ளூர் சென்று வருகின்றனர். சாலை மார்க்கமாக மட்டுமே திருவள்ளூர் செல்ல முடியும் என்பதால், பேருந்துகளை நம்பியே உள்ளனர்.
கும்மிடிப்பூண்டியில் இருந்து, காலை 7:30 மணி, 11:30 மணி, மாலை 3:30 மணி, இரவு 8:00 மணி என, நான்கு முறை அரசு பேருந்துகள் இயக்கப்படுகின்றன. இந்த சேவை போதுமானதாக இல்லை. கும்மிடிப்பூண்டி மக்களின் தேவைக்கு ஏற்ப பேருந்துகள் இயக்கப்படாததால், பயணியர் கடும் சிரமத்திற்கு ஆளாகின்றனர்.
எனவே, காலை மற்றும் மாலை நேரங்களில் கூடுதலாக அரசு பேருந்துகள் இயக்கப்பட வேண்டும். அதன் வாயிலாக, திருவள்ளூர் மட்டுமின்றி சிறுவாபுரி, ஆரணி, பெரியபாளையம், வெங்கல் செல்லும் பயணியரும் பயனடைவர் என, பகுதிவாசிகள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.