/உள்ளூர் செய்திகள்/திருவள்ளூர்/ அரியன்வாயல் அரசு நடுநிலை பள்ளி உயர்நிலையாக உயர்த்துவது எப்போது? அரியன்வாயல் அரசு நடுநிலை பள்ளி உயர்நிலையாக உயர்த்துவது எப்போது?
அரியன்வாயல் அரசு நடுநிலை பள்ளி உயர்நிலையாக உயர்த்துவது எப்போது?
அரியன்வாயல் அரசு நடுநிலை பள்ளி உயர்நிலையாக உயர்த்துவது எப்போது?
அரியன்வாயல் அரசு நடுநிலை பள்ளி உயர்நிலையாக உயர்த்துவது எப்போது?
ADDED : மே 23, 2025 10:54 PM
மீஞ்சூர்:மீஞ்சூர் பேரூராட்சிக்கு உட்பட்ட அரியன்வாயல் பகுதியில் உள்ள அரசு நடுநிலைப் பள்ளியில், 320 மாணவர்கள் கல்வி பயில்கின்றனர்.
இங்கு, எட்டாம் வகுப்பு முடிக்கும் மாணவர்கள் உயர்நிலைப் பள்ளியை தொடர, 3 கி.மீ., தொலைவு பயணியக்க வேண்டிய நிலை உள்ளது. அங்குள்ள ரயில்வே தண்டவாளங்களை கடந்து, பள்ளிக்கு செல்ல வேண்டிய அபாயநிலை உள்ளது. இதனால், பெற்றோரின் அச்சம் காரணமாக, உயர்நிலை கல்வியை தொடர அனுமதிப்பதில்லை.
இதனால், பெரும்பாலான மாணவர்கள் உயர்நிலை கல்வியை தொடர முடியாமல் இடைநிற்றலுடன் இருக்கின்றனர். இப்பள்ளியை தரம் உயர்த்தி, உயர்நிலை பள்ளியாக மாற்ற வேண்டும் என, தொடர்ந்து பெற்றோர் வலியுறுத்தி வருகின்றனர்.
மூன்று ஆண்டுகளுக்கு முன், இதற்காக முன்வைப்பு தொகையாக, 2 லட்சம் ரூபாயும் செலுத்தி, அரசின் உத்தரவிற்கு காத்திருக்கின்றனர்.
புதிய கட்டடங்களுடன் தேவையான வகுப்பறை வசதிகளும் இங்குள்ளதால், உயர்நிலை பள்ளியாக தரம் உயத்த பள்ளிக்கல்வித் துறை உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பெற்றோர், சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.