/உள்ளூர் செய்திகள்/திருவள்ளூர்/ தனியார் கல்வியை ஊக்குவிக்கிறதா கல்வித்துறை? அரசு பள்ளி சாலையில் தனியார் பள்ளி பேனர்கள் தனியார் கல்வியை ஊக்குவிக்கிறதா கல்வித்துறை? அரசு பள்ளி சாலையில் தனியார் பள்ளி பேனர்கள்
தனியார் கல்வியை ஊக்குவிக்கிறதா கல்வித்துறை? அரசு பள்ளி சாலையில் தனியார் பள்ளி பேனர்கள்
தனியார் கல்வியை ஊக்குவிக்கிறதா கல்வித்துறை? அரசு பள்ளி சாலையில் தனியார் பள்ளி பேனர்கள்
தனியார் கல்வியை ஊக்குவிக்கிறதா கல்வித்துறை? அரசு பள்ளி சாலையில் தனியார் பள்ளி பேனர்கள்
ADDED : மே 23, 2025 11:01 PM

திருவாலங்காடு:திருவாலங்காடு ஒன்றியம் சின்னம்மாபேட்டை ஊராட்சியில் வினாயகர் கோவில் குளம் அருகே, அரசு நடுநிலைப் பள்ளி அமைந்துள்ளது. இப்பள்ளியில் 1 - 8ம் வகுப்பு வரை, 180க்கும் மேற்பட்ட மாணவ - மாணவியர் பயின்று வருகின்றனர்.
பள்ளியில் ஆண்டு தேர்வு முடிந்து கோடை விடுமுறையில் மாணவர்கள் உள்ளனர். இப்பள்ளியில் எட்டாம் வகுப்பு முடித்த மாணவர்கள், உயர்நிலை கல்வி பெற மாற்று சான்றிதழ் பெற்று, வேறு பள்ளியில் சேர ஆவலுடன் வந்து செல்கின்றனர்.
இதை பயன்படுத்தி, தங்கள் பள்ளியில் மாணவர்களை சேர்க்க நினைக்கும் சில தனியார் பள்ளிகள், அரசு நடுநிலைப் பள்ளி சாலையில், குளத்தின் சுவர் மீது மாணவர்கள் மற்றும் அவர்களின் பெற்றோர் கவனத்தை ஈர்க்கும் வகையில் பேனர்கள் வைத்துள்ளனர்.
இதுகுறித்து சின்னம்மாபேட்டையைச் சேர்ந்த சமூக ஆர்வலர்கள் கூறியதாவது:
சின்னம்மாபேட்டை பகுதியில் 10க்கும் மேற்பட்ட இடங்களில், தனியார் பள்ளி நிர்வாகம் பேனர்கள் வைத்துள்ளது. அரசு பள்ளி மாணவர்களை, தனியார் பள்ளி நிர்வாகங்கள் தங்கள் பக்கம் இழுக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.
தற்போது, அரசு பள்ளி சாலையில் அரசுக்கு சொந்தமான இடத்தில் பேனர் வைக்க யார் அனுமதி வழங்கியது. கல்வித்துறை அதிகாரிகள் தனியார் பள்ளியை ஊக்குவிக்கின்றனரா என்ற கேள்வி எழுந்துள்ளது.
இதுபோன்று, அரசு இடங்களில் அத்துமீறி பேனர் வைப்பதை சம்பந்தப்பட்ட ஊராட்சி நிர்வாகம் தடுக்காமல் வேடிக்கை பார்ப்பது வேதனை அளிக்கிறது. எனவே, சம்பந்தப்பட்ட தனியார் கல்வி நிறுவனம் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.