/உள்ளூர் செய்திகள்/திருவள்ளூர்/ சாலையில் கால்நடைகள் உலா கலெக்டர் உத்தரவு என்னாச்சு? சாலையில் கால்நடைகள் உலா கலெக்டர் உத்தரவு என்னாச்சு?
சாலையில் கால்நடைகள் உலா கலெக்டர் உத்தரவு என்னாச்சு?
சாலையில் கால்நடைகள் உலா கலெக்டர் உத்தரவு என்னாச்சு?
சாலையில் கால்நடைகள் உலா கலெக்டர் உத்தரவு என்னாச்சு?
ADDED : செப் 13, 2025 01:41 AM

திருவள்ளூர்:கலெக்டர் எச்சரிக்கையை மீறி, திருவள்ளூர் - ஊத்துக்கோட்டை சாலையில் உலா வரும் கால்நடைகளால், வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கி வருகின்றனர்.
'திருவள்ளூர் மாவட்டத்தில் ஒன்றிய, மாநில, தேசிய நெடுஞ்சாலைகளில் கால்நடைகளை விடக்கூடாது. அவ்வாறு கால்நடைகள் சுற்றித்திரிந்தால், அவற்றை பறிமுதல் செய்வதுடன், உரிமையாளர்களுக்கு அபராதம் விதிக்கப்படும்' என, கலெக்டர் எச்சரித்து வருகிறார். இருப்பினும், கால்நடை உரிமையாளர்கள், அவரது உத்தரவை அலட்சியப்படுத்தி வருகின்றனர்.
திருவள்ளூர் - ஊத்துக்கோட்டை சாலையில், தினமும் காலை - மாலை நேரங்களில் கால்நடைகள் கூட்டமாக உலா வருகின்றன. ஐ.சி.எம்.ஆர்., வேடங்கிநல்லுார், புல்லரம்பாக்கம், சதுரங்கப்பேட்டை என, வழிநெடுகிலும் கால்நடைகள் சாலையில் சுற்றித் திரிகின்றன.
இதனால், போக்குவரத்து பாதிப்பதுடன், இருசக்கர வாகன ஓட்டிகள் அடிக்கடி விபத்தில் சிக்கி காயமடைந்து வருகின்றனர். சில நேரம் உயிரிழப்பும் ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக, ஊத்துக்கோட்டை சாலையில் வாகன ஓட்டிகள் அச்சத்துடன் பயணிக்க வேண்டியுள்ளது.
எனவே, சாலையில் சுற்றித்திரியும் கால்நடைகளை பறிமுதல் செய்து, பலமுறை எச்சரித்தும் கேட்காததால், அவற்றை கோசாலையில் ஒப்படைக்க வேண்டும். மேலும், கால்நடை உரிமையாளர்களுக்கு அபராதம் விதிக்க வேண்டும் என, வாகன ஓட்டிகள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.