/உள்ளூர் செய்திகள்/திருவள்ளூர்/ ஏரியில் மண் எடுத்து செங்கல் சூளை ரியல் எஸ்டேட்டுக்கு விற்பனை ஆர்.டி.ஓ.,விடம் விவசாயிகள் புகார் ஏரியில் மண் எடுத்து செங்கல் சூளை ரியல் எஸ்டேட்டுக்கு விற்பனை ஆர்.டி.ஓ.,விடம் விவசாயிகள் புகார்
ஏரியில் மண் எடுத்து செங்கல் சூளை ரியல் எஸ்டேட்டுக்கு விற்பனை ஆர்.டி.ஓ.,விடம் விவசாயிகள் புகார்
ஏரியில் மண் எடுத்து செங்கல் சூளை ரியல் எஸ்டேட்டுக்கு விற்பனை ஆர்.டி.ஓ.,விடம் விவசாயிகள் புகார்
ஏரியில் மண் எடுத்து செங்கல் சூளை ரியல் எஸ்டேட்டுக்கு விற்பனை ஆர்.டி.ஓ.,விடம் விவசாயிகள் புகார்
ADDED : செப் 13, 2025 01:40 AM

திருத்தணி:திருத்தணியில் விவசாயிகள் போர்வையில் ஏரியில் மண் எடுத்து ரியல் எஸ்டேட், செங்கல் சூளைக்கு விற்பனை செய்வதாக ஆர்.டி.ஓ.,விடம் விவசாயிகள் புகார் தெரிவித்தனர்.
திருத்தணி வருவாய் கோட்டத்திற்கு உட்பட்ட விவசாயிகளுக்கு, ஆர்.டி.ஓ., அலுவலகத்தில் விவசாயிகள் நலன் காக்கும் கூட்டம் ஆர்.டி.ஓ., கனிமொழி தலைமையில் நேற்று நடைபெற்றது.
கூட்டத்தில் பங்கேற்ற விவசாயிகள் அளித்த மனு விபரம்:
திருத்தணி கூட்டுறவு சர்க்கரை ஆலையை ஜனவரி மாதத்திற்குள் நவீனபடுத்தவில்லை என்றால், தரையில் அமர்ந்து போராட்டம் நடத்த உள்ளோம்.
சென்னை -- திருப்பதி தேசிய நெடுஞ்சாலையின் நடுவில் அமைக்கப்படும் மைய தடுப்புகளால், கனகம்மாசத்திரம் சுற்றுவட்டார மக்கள் பாதிக்கப்படுகின்றனர்.
காட்டுப்பன்றிகள் சேதப்படுத்திய விவசாய நிலங்களின் உரிமையாளர்களுக்கு நிவாரண தொகை ஓராண்டாக வழங்கவில்லை.
திருத்தணி மற்றும் ஆர்.கே.பேட்டை தாலுகாவில் விவசாய நிலங்களை மேம்படுத்துவதாக கூறி, ஏரியில் மண் எடுக்க அனுமதி பெற்று ரியல் எஸ்டேட், செங்கல் சூளைக்கு விற்கின்றனர்.
பொதுமக்கள் புகார் தெரிவித்தாலும், தாசில்தார்கள் மண் கொள்ளை குறித்து நடவடிக்கை எடுப்பதில்லை.
அரசு பள்ளிகளில் மூன்று ஆண்டுகளுக்கு மேல் பணிபுரியும் ஆசிரியர்களை பணியிட மாற்றம் செய்ய வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தினர்.