Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/திருவள்ளூர்/ ஜி.எஸ்.டி., வரி குறைப்பிற்கு நன்றி சொல்லணும்: நாகேந்திரன்

ஜி.எஸ்.டி., வரி குறைப்பிற்கு நன்றி சொல்லணும்: நாகேந்திரன்

ஜி.எஸ்.டி., வரி குறைப்பிற்கு நன்றி சொல்லணும்: நாகேந்திரன்

ஜி.எஸ்.டி., வரி குறைப்பிற்கு நன்றி சொல்லணும்: நாகேந்திரன்

ADDED : செப் 10, 2025 10:01 PM


Google News
மீஞ்சூர்:'ஜி.எஸ்.டி., வரி குறைப்பிற்கு, தமிழக அரசு நன்றி தெரிவிக்க வேண்டும்' என, பா.ஜ., மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.

மீஞ்சூர் அடுத்த அத்திப்பட்டு பகுதியைச் சேர்ந்த பா.ஜ., மாவட்ட செயலரும், அன்பாலயா அறக்கட்டளை நிறுவனருமான சிவகுமார், இலவச ஐ.ஏ.எஸ்., பயிற்சி மையத்தை செயல்படுத்தி உள்ளார்.

இதற்கான துவக்க விழா நேற்று மீஞ்சூரில் நடந்தது. இதில், பா.ஜ., மாநில தலைவர் நாகேந்திரன் பங்கேற்று, பயிற்சி மையத்தை திறந்து வைத்தார்.

அதன்பின் நாகேந்திரன் கூறியதாவது:

ஜி.எஸ்.டி., வரி குறைத்ததற்கு தமிழக அரசு மட்டுமின்றி, தமிழக மக்களும் நன்றி தெரிவிக்க வேண்டும். இந்திய அரசியல் வரலாற்றில், 1947க்கு பின், அதிகரித்த வரியை குறைத்தது, பிரதமர் நரேந்திர மோடி மட்டும் தான். இன்று, 10 சதவீத வரியை குறைத்துள்ளதால், தமிழக அரசு நன்றி சொல்ல வேண்டும்.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us