/உள்ளூர் செய்திகள்/திருவள்ளூர்/ 'மாஜி' அ.தி.மு.க., கவுன்சிலர் தாசில்தார் மீது புகார் மனு 'மாஜி' அ.தி.மு.க., கவுன்சிலர் தாசில்தார் மீது புகார் மனு
'மாஜி' அ.தி.மு.க., கவுன்சிலர் தாசில்தார் மீது புகார் மனு
'மாஜி' அ.தி.மு.க., கவுன்சிலர் தாசில்தார் மீது புகார் மனு
'மாஜி' அ.தி.மு.க., கவுன்சிலர் தாசில்தார் மீது புகார் மனு
ADDED : செப் 10, 2025 10:00 PM
திருத்தணி:'ஏரியில் வண்டல் மண் எடுப்பதற்கு உத்தரவு வழங்கிய தாசில்தாரே, தற்போது மண் எடுக்கக்கூடாது' என, தடைபோடுவதாக, முன்னாள் அ.தி.மு.க., கவுன்சிலர், ஆர்.டி.ஓ.,விடம் புகார் அளித்துள்ளார்.
திருத்தணி ஒன்றியம் தலையாறிதாங்கல் கிராமத்தைச் சேர்ந்தவர் பாலாஜி, 50; முன்னாள் அ.தி.மு.க., கவுன்சிலர்.
இவர், கடந்த வாரம் திருத்தணி தாசில்தார் மலர்விழியிடம், 'எனக்கு சொந்தமான நிலத்தில் மகாகனி மரங்கள் உள்ளன.
'பலத்த காற்று, மழை வரும் என்பதால், மகாகனி மரங்கள் சாய்ந்துவிடும் அபாயம் உள்ளது. அதற்கு பாதுகாப்பு அளிப்பதற்கு, வண்டல் மண் தேவைப்படுகிறது. தலையாரிதாங்கல் ஏரியில் மண் எடுக்க அனுமதி வழங்க வேண்டும்' என, மனு அளித்தார்.
தாசில்தார் ஏரியில் மண் எடுக்க அனுமதி வழங்கினார். இதை தொடர்ந்து பாலாஜி, ஒரு நாள் மட்டும் ஏழு டிராக்டர் லோடு மண் எடுத்து, மகாகனி மரங்களுக்கு பயன்படுத்தினார்.
அதன்பின், ஏரியில் மண் எடுக்க சென்ற போது, 'மண் எடுக்கக்கூடாது, எனக்கு சிலரால் அச்சுறுத்தல் வருகிறது' என, மண் எடுப்பதை தாசில்தார் தடுத்து நிறுத்தினார்.
நேற்று பாலாஜி, திருத்தணி ஆர்.டி.ஓ., அலுவலகத்தில், தாசில்தாருக்கு எதிராக மனு அளித்தார். மனுவை பெற்ற நேர்முக உதவியாளர் ராமன், 'உரிய நடவடிக்கை எடுக்கப்படும்' என்றார்.