/உள்ளூர் செய்திகள்/திருவள்ளூர்/ அகூர் ஊராட்சியில் குடிநீர் தட்டுப்பாடு மோட்டார் பழுது: அதிகாரிகள் பாராமுகம் அகூர் ஊராட்சியில் குடிநீர் தட்டுப்பாடு மோட்டார் பழுது: அதிகாரிகள் பாராமுகம்
அகூர் ஊராட்சியில் குடிநீர் தட்டுப்பாடு மோட்டார் பழுது: அதிகாரிகள் பாராமுகம்
அகூர் ஊராட்சியில் குடிநீர் தட்டுப்பாடு மோட்டார் பழுது: அதிகாரிகள் பாராமுகம்
அகூர் ஊராட்சியில் குடிநீர் தட்டுப்பாடு மோட்டார் பழுது: அதிகாரிகள் பாராமுகம்
ADDED : ஜூன் 22, 2025 08:50 PM
திருத்தணி:திருத்தணி ஒன்றியம் அகூர் காலனியில், 200க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இப்பகுதியில் ஒரு மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி மற்றும் மூன்று மினிடேங்க் வாயிலாக தண்ணீர் நிரப்பி வினியோகம் செய்யப்படுகிறது.
மூன்று மாதங்களாக அகூர் காலனி மக்களுக்கு சீரான குடிநீர் வினியோகம் செய்யவில்லை. இதனால், குடிநீருக்காக அப்பகுதி மக்கள் கடும் சிரமப்படுகின்றனர். உதாரணமாக ஜோதிநகர், நடுத்தெரு, குடோன் தெரு உள்ளிட்ட தெருக்களில், ஒரு மாதமாக குடிநீர் வினியோகம் செய்யவில்லை.
மினிடேங்கிற்கு குடிநீர் ஏற்றும் மின்மோட்டார் பழுதாகி ஒரு மாதமாகியும், அதை சீரமைக்காமல் ஒன்றிய அதிகாரிகள் அலட்சியம் காட்டுகின்றனர். இப்பகுதி மக்கள் குடிநீர் வழங்கக்கோரி, ஊராட்சி மற்றும் ஒன்றிய அலுவலகத்தில் புகார் தெரிவித்தனர்.
ஆனால், தற்போது வரை குடிநீர் பிரச்னை தீர்க்காமல் அதிகாரிகள் அலட்சியம் காட்டி வருகின்றனர் என, மக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
எனவே, கலெக்டர் விரைந்து நடவடிக்கை எடுக்காவிட்டால், ஊராட்சி மக்கள் ஒன்றிணைந்து திருத்தணி ஒன்றிய அலுவலகம் முன் போராட்டம் நடத்துவதற்கு திட்டமிட்டுள்ளதாக, அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்.