Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/திருவள்ளூர்/ கூடுதல் பேருந்து இயக்க மாணவர்கள் கோரிக்கை

கூடுதல் பேருந்து இயக்க மாணவர்கள் கோரிக்கை

கூடுதல் பேருந்து இயக்க மாணவர்கள் கோரிக்கை

கூடுதல் பேருந்து இயக்க மாணவர்கள் கோரிக்கை

ADDED : ஜூன் 22, 2025 08:51 PM


Google News
திருமழிசை:திருமழிசை பேரூராட்சியில் உள்ள பேருந்து நிலையத்தை பயன்படுத்தி, இப்பகுதியைச் சேர்ந்த பள்ளி மாணவ - மாணவியர் மற்றும் பகுதிவாசிகள் திருவள்ளூர், பூந்தமல்லி சென்று வருகின்றனர்.

இப்பகுதியில் காலை - மாலை நேரங்களில் போதிய பேருந்துகள் இயக்கப்படாததால், பள்ளி செல்லும் மாணவ - மாணவியர் கடும் சிரமப்பட்டு வருகின்றனர்.

அரசு பள்ளி மாணவ - மாணவியர் இலவச பயண அட்டை இருந்தும், சில நேரங்களில் பணம் கொடுத்து ஷேர் ஆட்டோக்களில் பயணம் செய்யும் அவலம் உள்ளது. இதனால், குறித்த நேரத்தில் பள்ளிக்கு செல்ல முடியாமல், கல்வி பாதிக்கப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

எனவே, மாவட்ட நிர்வாகம், காலை - மாலை நேரங்களில் கூடுதல் பேருந்துகள் இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென, மாணவ - மாணவியர் கோரிக்கை விடுத்துள்ளனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us