/உள்ளூர் செய்திகள்/திருவள்ளூர்/ சீரமைக்கப்படாத கால்வாய் மழைநீர் செல்வதில் சிக்கல் சீரமைக்கப்படாத கால்வாய் மழைநீர் செல்வதில் சிக்கல்
சீரமைக்கப்படாத கால்வாய் மழைநீர் செல்வதில் சிக்கல்
சீரமைக்கப்படாத கால்வாய் மழைநீர் செல்வதில் சிக்கல்
சீரமைக்கப்படாத கால்வாய் மழைநீர் செல்வதில் சிக்கல்
ADDED : செப் 13, 2025 01:23 AM

பள்ளிப்பட்டு:கால்வாய்கள் சீரமைக்கப்படாததால், மழைநீர் செல்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
பள்ளிப்பட்டு ஒன்றியம் பெருமாநல்லுார் மற்றும் பொம்மராஜிபேட்டை ஊராட்சி பகுதியில் புல்லுார் கிழக்கு காப்புக்காடு அமைந்துள்ளது. இந்த காப்புக்காட்டில் இருந்து மழைநீர், ஓடைகள் மற்றும் வரத்து கால்வாய்கள் வாயிலாக கொசஸ்தலை ஆற்றில் கலக்கிறது.
இதில், மேலப்பூடி மற்றும் பொம்மராஜிபேட்டை இடையே செல்லும் ஓடை சீரமைக்கப்படாமல் துார்ந்துள்ளது. இதனால், மழைநீர் செல்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. மேலும், ஓடையில் ஆங்காங்கே குட்டையாக மழைநீர் தேங்கி நிற்பதால், விவசாயிகள் அதிருப்தி அடைந்துள்ளனர்.
எனவே, ஓடை மற்றும் நீர்வரத்து கால்வாயை சீரமைக்க வேண்டும் என, விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.