/உள்ளூர் செய்திகள்/திருவள்ளூர்/ 'பார்க்கிங்' ஆக மாறிய சாலை: வாகன ஓட்டிகள் கடும் அவதி 'பார்க்கிங்' ஆக மாறிய சாலை: வாகன ஓட்டிகள் கடும் அவதி
'பார்க்கிங்' ஆக மாறிய சாலை: வாகன ஓட்டிகள் கடும் அவதி
'பார்க்கிங்' ஆக மாறிய சாலை: வாகன ஓட்டிகள் கடும் அவதி
'பார்க்கிங்' ஆக மாறிய சாலை: வாகன ஓட்டிகள் கடும் அவதி
ADDED : செப் 13, 2025 01:23 AM

திருமழிசை:சென்னை - பெங்களூரு தேசிய அதிவிரைவு நெடுஞ்சாலையின் இணைப்பு சாலை, வாகனம் நிறுத்துமிடமாக மாறியுள்ளதால், நெரிசலில் சிக்கி மற்ற வாகன ஓட்டிகள் கடும் அவதிப் பட்டு வருகின்றனர்.
சென்னை - பெங்களூரு அதிவிரைவு தேசிய நெடுஞ்சாலையின் இருபுறமும், கிராம மக்கள் செல்லும் வகையில், இணைப்பு சாலை அமைக்கப்பட்டுள்ளது.
இந்த இணைப்பு சாலையில், தொழிற்சாலைகளுக்கு செல்லும் கனரக வாகனங்கள் உட்பட பல்வேறு வாகனங்கள் வரிசையாக நிறுத்தப்படுகின்றன. இதனால், வாகன ஓட்டிகள் செல்ல இடமின்றி, போக்குவரத்து நெரிசலில் சிக்கி சிரமப்பட்டு வருகின்றனர்.
இச்சாலையில் ரோந்து பணியில் ஈடுபடும் போக்குவரத்து போலீசாரும், எவ்வித நடவடிக்கையும் எடுப்பதில்லை. தவிர, இணைப்பு சாலையில் 'நோ பார்க்கிங்' அறிவிப்பு பலகைகள் வைக்காததே இதற்கு காரணம் என, வாகன ஓட்டிகள் குற்றஞ்சாட்டுகின்றனர்.
குறிப்பாக, குத்தம்பாக்கம், பாப்பரம்பாக்கம், செட்டிபேடு, தண்டலம், இருங்காட்டுகோட்டை ஆகிய பகுதிகளில் ஏராளமான கனரக வாகனங்கள் நிறுத்தப்பட்டுள்ளன.
போக்குவரத்து நெரிசலுக்கு தீர்வு காண, இணைப்பு சாலையில் நிறுத்தப்படும் கனரக வாகனங்களை அப்புறப்படுத்த, சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, வாகன ஓட்டிகள் வலியுறுத்தி வருகின்றனர்.