/உள்ளூர் செய்திகள்/திருவள்ளூர்/ அரசு பஸ் கண்ணாடி உடைத்த இரண்டு மாணவர்கள் கைது அரசு பஸ் கண்ணாடி உடைத்த இரண்டு மாணவர்கள் கைது
அரசு பஸ் கண்ணாடி உடைத்த இரண்டு மாணவர்கள் கைது
அரசு பஸ் கண்ணாடி உடைத்த இரண்டு மாணவர்கள் கைது
அரசு பஸ் கண்ணாடி உடைத்த இரண்டு மாணவர்கள் கைது
ADDED : செப் 22, 2025 12:10 AM
திருத்தணி, செப். 22--
திருத்தணி பேருந்து நிலையத்தில் இருந்து மகான்காளிகாபுரம் நோக்கி, கடந்த வாரம் அரசு பேருந்து சென்று கொண்டிருந்தது. இதில் பள்ளி, கல்லுாரி மாணவர்கள் அதி களவில் பயணம் செய்தனர்.
மாணவர்கள் பேருந்து படியில் தொங்கியவாறு பயணம் செய்ததை நடத்துநர் நரேஷ் தட்டிக்கேட்டார். இதனால், ஆத்திரமடைந்த பள்ளி மாணவன் ஒருவர், கோரமங்கலம் பேருந்து நிறுத்தத்தில் இறங்கினார்.
பின் , நண்பர்கள் இருவருடன் பைக்கில் பின்தொடர்ந்து சென்று, அகூர் அருகே பேருந்தின் வழிமறித்து நடத்துநர் நரேஷை கட்டையால் தாக்கியும், பேருந்து கண்ணாடி யை உடைத்துவிட்டு தப்பிச்சென்றனர்.
இது குறித்து, திருத்தணி போலீசார் வழக்குப் பதிந்து, திருத்தணி அருகே உள்ள கிராமங்களைச் சேர்ந்த பிளஸ் 2 மாணவர்கள் இருவரை கைது செய்து விசாரிக்கின்றனர்.