/உள்ளூர் செய்திகள்/திருவள்ளூர்/ புரட்டாசி மஹாளய அமாவாசை முன்னோருக்கு தர்ப்பணம் புரட்டாசி மஹாளய அமாவாசை முன்னோருக்கு தர்ப்பணம்
புரட்டாசி மஹாளய அமாவாசை முன்னோருக்கு தர்ப்பணம்
புரட்டாசி மஹாளய அமாவாசை முன்னோருக்கு தர்ப்பணம்
புரட்டாசி மஹாளய அமாவாசை முன்னோருக்கு தர்ப்பணம்
ADDED : செப் 22, 2025 12:16 AM

- நமது நிருபர் - திருவள்ளூர் வீரராகவர் கோவிலில் நேற்று, மஹாளய அமாவாசையை முன்னிட்டு ஏராளமான பக்தர்கள், முன்னோருக்கு தர்ப்பணம் செய்தனர்.
திருவள்ளூர் வீரராகவர் கோவிலில், மாதந்தோறும் அமாவாசை அன்று, திரளான பக்தர்கள் முன்னோருக்கு தர்ப்பணம் செய்வர்.
நேற்று புரட்டாசி மஹாளய அமாவாசை என்பதால், ஆயிரக்கணக்கான பக்தர்கள் நேற்று முன்தினம் இரவே திருவள்ளூருக்கு வந்து குவிந்தனர்.
கோவில் வளாகத்தில் தங்கிய பக்தர்கள், நேற்று காலை ஹிருதாப நாசினி குளத்தில் புனித நீராடி, குளக்கரையில் முன்னோருக்கு தர்ப்பணம் செய்து வழிபட்டனர். பால், வெல்லம் ஆகியவற்றை குளத்தில் கரைத்து, பின் வீரராகவ பெருமாளை தரிசித்தனர்.
மேலும், திருமழிசை ஜெகந்நாத பெருமாள் கோவில், பூங்கா நகர் சிவ விஷ்ணு கோவில் உட்பட பல்வேறு கோவில்களில் சிறப்பு அபிஷேகம், ஆராதனை நடந்தது.
அதேபோல், திருத்தணி முருகன் கோவில் மலையடிவாரத்தில் உள்ள திருக்குளம், பழைய தர்மராஜா கோவில் அருகே உள்ள சதாசிவம் குளக்கரை மற்றும் மேல்திருத்தணி நல்லாங்குளம் ஆகிய இடங்களில், ஏராளமானோர் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்து வழிபட்டனர்.
இதுதவிர, வீடுகளில் முன்னோர்களுக்கு படையலிட்டும் மக்கள் வழிப்பட்டனர். மேலும், திருத்தணி நகரில் உள்ள அனைத்து அம்மன் கோவில்களில் சிறப்பு பூஜைகள் நடந்தன. மத்துார் மகிஷாசுரமர்த்தினி அம்மன் கோவிலில், மூலவருக்கு 108 லிட்டர் பால் அபிஷேகம் மற்றும் சிறப்பு பூஜைகள் நடந்தன.