/உள்ளூர் செய்திகள்/திருவள்ளூர்/ காலாவதி மருந்துகள் வைத்திருந்த இரு மருத்துவமனைகளுக்கு 'சீல்' காலாவதி மருந்துகள் வைத்திருந்த இரு மருத்துவமனைகளுக்கு 'சீல்'
காலாவதி மருந்துகள் வைத்திருந்த இரு மருத்துவமனைகளுக்கு 'சீல்'
காலாவதி மருந்துகள் வைத்திருந்த இரு மருத்துவமனைகளுக்கு 'சீல்'
காலாவதி மருந்துகள் வைத்திருந்த இரு மருத்துவமனைகளுக்கு 'சீல்'
ADDED : ஜூன் 05, 2025 03:00 AM

கும்மிடிப்பூண்டி:கும்மிடிப்பூண்டி புறவழிச்சாலையில், 'ஆல்பா மருத்துவமனை' என்ற தனியார் மருத்துவமனை இயங்கி வருகிறது.
இம்மருத்துவமனையில் காலாவதியான மருந்துகள் இருப்பதாகவும், முறையான சிகிச்சை அளிக்கப்படுவதில்லை எனவும், மாவட்ட மருத்துவ நிர்வாகத்திற்கு தொடர்ந்து புகார்கள் சென்றன.
அதன்படி, திருவள்ளூர் மாவட்ட மருத்துவ இணை இயக்குநர் டாக்டர் அம்பிகா தலைமையிலான குழுவினர், நேற்று மதியம் இம்மருத்துவமனையில் திடீர் ஆய்வு மேற்கொண்டனர்.
இதில், காலாவதியான மருந்துகள் இருப்பது கண்டறியப்பட்டதாக கூறப்படுகிறது.
அங்கிருந்த ஊழியர்களை வெளியேற்றி, மருத்துவமனைக்கு 'சீல்' வைத்தனர். இதை தொடர்ந்து, அதனருகே உள்ள மற்றொரு தனியார் மருத்துவமனையில் ஆய்வு மேற்கொண்டனர். முறையாக செயல்படவில்லை எனக்கூறி, அந்த மருத்துவமனைக்கும் 'சீல்' வைக்கப்பட்டது.