ADDED : செப் 21, 2025 11:01 PM
திருவள்ளூர்:திருவள்ளூர் தாலுகா காவல் நிலைய போலீசார், நேற்று முன்தினம் இரவு புட்லுார் ரயில்வே மேம்பாலம் அருகே வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது, அவ்வழியாக வந்த சரக்கு வாகனத்தை நிறுத்தி சோதனை செய்தனர். அதில், 80 சாக்கு மூட்டைகளில் இருந்த 1 யூனிட் ஆற்று மணலையும், சரக்கு வாகனத்தையும் பறிமுதல் செய்தனர்.
இதுகுறித்து, வழக்கு பதிந்த திருவள்ளூர் தாலுகா போலீசார், ஆற்று மணல் கடத்தி வந்த திருவூர் வேலு, 38, சுபேஷ்குமார், 30, இருவரையும் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.