/உள்ளூர் செய்திகள்/திருவள்ளூர்/ சத்துணவு சமையலர், உதவியாளருக்கு பயிற்சி சத்துணவு சமையலர், உதவியாளருக்கு பயிற்சி
சத்துணவு சமையலர், உதவியாளருக்கு பயிற்சி
சத்துணவு சமையலர், உதவியாளருக்கு பயிற்சி
சத்துணவு சமையலர், உதவியாளருக்கு பயிற்சி
ADDED : மே 31, 2025 11:17 PM
திருத்தணி :தமிழகத்தில் கோடை விடுமுறைக்கு பின், அரசு மற்றும் தனியார் பள்ளிகள் நாளை திறக்கப்பட உள்ளது. இதன் காரணமாக, நேற்று முன்தினம் முதல் அரசு பள்ளிகளில் சுத்தம் செய்யும் பணி நடந்து வருகிறது.
திருத்தணி ஒன்றிய அலுவலகத்தில் சத்துணவு சமையலர் மற்றும் உதவியாளர்களுக்கு ஒரு நாள் புத்தாக்க பயிற்சி நேற்று அளிக்கப்பட்டது. இதில் திருத்தணி, திருவாலங்காடு, பள்ளிப்பட்டு, ஆர்.கே.பேட்டை மற்றும் பூண்டி ஆகிய ஒன்றியங்களில் இருந்து, தலா ஐந்து சமையலர், ஐந்து உதவியாளர் வீதம், மொத்தம் 50 பேர் பங்கேற்றனர்.
இதில், உணவு தயாரிப்பு அலுவலர் கார்த்திக், பீரகுப்பம் வட்டார மருத்துவ அலுவலர் கலைவாணி, தீயணைப்பு துறை அலுவலர், ஊட்டச்சத்து துறை அலுவலர் மற்றும் யோகா பயிற்சி ஆசிரியர் பங்கேற்று, சமையல் மற்றும் உதவியாளர்களுக்கு பயிற்சி அளித்தனர்.
இதில், உணவு தரமாக தயாரித்து, பாதுகாப்பாக வைத்து மாணவர்களுக்கு பரிமாற வேண்டும். சமையல் செய்யும் போது தீ விபத்து தவிர்ப்பது உள்ளிட்ட பல்வேறு பயிற்சிகள் அளிக்கப்பட்டது.