/உள்ளூர் செய்திகள்/திருவள்ளூர்/ பகலில் எரியும் 300 தெருவிளக்குகள் சம்பளம் நிலுவையால் மின்சாரம் வீண் பகலில் எரியும் 300 தெருவிளக்குகள் சம்பளம் நிலுவையால் மின்சாரம் வீண்
பகலில் எரியும் 300 தெருவிளக்குகள் சம்பளம் நிலுவையால் மின்சாரம் வீண்
பகலில் எரியும் 300 தெருவிளக்குகள் சம்பளம் நிலுவையால் மின்சாரம் வீண்
பகலில் எரியும் 300 தெருவிளக்குகள் சம்பளம் நிலுவையால் மின்சாரம் வீண்
ADDED : மே 31, 2025 11:18 PM

பொன்னேரி :மீஞ்சூர் ஒன்றியம் தடப்பெரும்பாக்கம் ஊராட்சிக்கு உட்பட்ட திருவேங்கிடபுரம் பகுதியில், 300 தெருவிளக்குகள் உள்ளன. இதற்காக, 30 இடங்களில் 'பீயூஸ் கேரியர்கள்' பொருத்தப்பட்டு உள்ளன. மாலை 6:00 மணிக்கு பியூஸ் கேரியர்கள் போடப்பட்டு, மறுநாள் காலை 6:00 மணிக்கு எடுக்கப்படும்.
இதன் வாயிலாக, இரவு நேரங்களில் மட்டும் தெருவிளக்குகள் எரியும். பகலில் எரிந்து, மின்சாரம் வீணாவது தடுக்கப்படும். இதை தினமும் செயல்படுத்தும் ஊழியருக்கு, மூன்று மாதங்களாக சம்பளம் வழங்கப்படவில்லை எனக் கூறப்படுகிறது.
இதனால், மாலை நேரங்களில் அந்தந்த பகுதிவாசிகள் 'பியூஸ் கேரியர்' போட்டு, தெருவிளக்குகளை போடுகின்றனர். அடுத்த நாள் காலை அவற்றின் இயக்கத்தை நிறுத்துவதில்லை. இதனால், பகல் முழுதும் தெருவிளக்குகள் எரிந்தபடியே இருக்கின்றன. இதனால் மின்சாரம் வீணாகிறது.
இதுகுறித்து சமூக ஆர்வலர்கள் கூறியதாவது:
மின்விளக்குகள் சரியான நேரத்தில் போடுவதில்லை. ஊராட்சி அலுவலரை தொடர்பு கொள்ள முடிவதில்லை. பழுதான மின்விளக்குகளும் மாற்றப்படாமல் உள்ளன. பகலில் மின்விளக்குகள் எரிவதால், மின்சாரம் வீணாகிறது.
மேற்கண்ட 300 மின்விளக்குகளும் பகல் முழுதும் எரிந்தால், ஒரு நாளைக்கு, 30 - 40 யூனிட் மின்சாரம் வீணாகிறது. எனவே, மீஞ்சூர் ஒன்றிய நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.