/உள்ளூர் செய்திகள்/திருவள்ளூர்/ கிழிந்து தொங்கும் விளம்பர பேனர்கள் நெடுஞ்சாலையில் திக்... திக்... பயணம் கிழிந்து தொங்கும் விளம்பர பேனர்கள் நெடுஞ்சாலையில் திக்... திக்... பயணம்
கிழிந்து தொங்கும் விளம்பர பேனர்கள் நெடுஞ்சாலையில் திக்... திக்... பயணம்
கிழிந்து தொங்கும் விளம்பர பேனர்கள் நெடுஞ்சாலையில் திக்... திக்... பயணம்
கிழிந்து தொங்கும் விளம்பர பேனர்கள் நெடுஞ்சாலையில் திக்... திக்... பயணம்
ADDED : ஜூன் 12, 2025 03:02 AM

திருமழிசை,:சென்னை, பள்ளிக்கரணையில் 2019 செப்., மாதம் நெடுஞ்சாலையில் வைக்கப்பட்ட பேனர் விழுந்ததில், பைக்கில் சென்ற சுபஸ்ரீ, 23, என்ற இளம்பெண் உயிரிழந்தார்.
இதையடுத்து, சென்னை உயர் நீதிமன்றம், நெடுஞ்சாலை மற்றும் தேசிய நெடுஞ்சாலை பகுதிகளில் விளம்பர பேனர் வைக்க தடை விதித்தது.
தற்போது சென்னை- பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையோரங்களில் உயரமான கட்டங்கள் மீது விளம்பர பேனர் வைப்பது அதிகரித்துள்ளது.
இதை தடுக்க வேண்டிய அதிகாரிகள் கண்டும், காணாமலும் உள்ளனர்.
கடந்த சில தினங்களாக காற்று, மழை போன்ற இயற்கை சீற்றங்களால் உயரமான கட்டடங்களின் மீது வைக்கப்படும் விளம்பர பேனர்கள் கிழிந்து தொங்கி வருவதால், வாகன ஓட்டிகள் அச்சத்துடன் சென்று வருகின்றனர்.
இவ்வாறு கிழிந்து தொங்கும் விளம்பர பேனர்களை அகற்றுவதில் சம்பந்தப்பட்டவர்கள் அலட்சியம் காட்டி வருவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
எனவே, மாவட்ட நிர்வாகம் நெடுஞ்சாலையோரம் உயரமான கட்டடங்கள் மீது விளம்பர பேனர் வைப்பதை தடுக்க கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, வாகன ஒட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.