/உள்ளூர் செய்திகள்/திருவள்ளூர்/டி.என்.சி.ஏ., கல்லூரி கிரிக்கெட்: குருநானக் அணி அபாரம்டி.என்.சி.ஏ., கல்லூரி கிரிக்கெட்: குருநானக் அணி அபாரம்
டி.என்.சி.ஏ., கல்லூரி கிரிக்கெட்: குருநானக் அணி அபாரம்
டி.என்.சி.ஏ., கல்லூரி கிரிக்கெட்: குருநானக் அணி அபாரம்
டி.என்.சி.ஏ., கல்லூரி கிரிக்கெட்: குருநானக் அணி அபாரம்
ADDED : பிப் 11, 2024 12:43 AM
சென்னை:டி.என்.சி.ஏ., எனும் தமிழ்நாடு கிரிக்கெட் சங்கத்தின், கல்லுாரிகளுக்கு இடையிலான அழைப்பிதழ் கிரிக்கெட் போட்டிகள், சென்னையில் நடக்கின்றன.
போட்டியில், குருநானக், எஸ்.ஆர்.எம்., - லயோலா, விவேகானந்தா உள்ளிட்ட மொத்தம் 32 அணிகள் பங்கேற்றுள்ளன.
'நாக் அவுட்' போட்டிகள் முடிவில், 16 அணிகள் 'லீக்' சுற்றுகளுக்கு தகுதி பெற்று, 30 ஓவர்களுக்கான ஆட்டத்தில் மோதி வருகின்றன.
நேற்று முன்தினம் நடந்த இரண்டாவது சுற்று ஆட்டத்தில், குருநானக் மற்றும் பச்சையப்பன் அணிகள் மோதின.
முதல் பேட் செய்த குருநானக் அணி, 30 ஓவர்களில் ஏழு விக்கெட் இழந்து, 217 ரன்களை அடித்தது. அடுத்து பேட் செய்த பச்சையப்பன் அணி, 27.3 ஓவர்களில் ஆல் அவுட் ஆகி, 149 ரன்களை அடித்தது. இதனால், 68 ரன்கள் வித்தியாசத்தில், குருநானக் வெற்றி பெற்றது.
மற்றொரு போட்டியில், அண்ணா பல்கலை அணி, 36.2 ஓவர்களில் 'ஆல் அவுட்' ஆகி, 111 ரன்களை அடித்தது. அடுத்து களமிறங்கிய சவீதா அணி, 29.1 ஓவர்களில் நான்கு விக்கெட் இழந்து, 117 ரன்களை அடித்து வெற்றி பெற்றது. போட்டிகள் தொடர்ந்து நடக்கின்றன.