/உள்ளூர் செய்திகள்/திருவள்ளூர்/ குடிநீர் சுத்திகரிப்பு நிலையம் 8 மாதமாக திறக்காத அவலம் குடிநீர் சுத்திகரிப்பு நிலையம் 8 மாதமாக திறக்காத அவலம்
குடிநீர் சுத்திகரிப்பு நிலையம் 8 மாதமாக திறக்காத அவலம்
குடிநீர் சுத்திகரிப்பு நிலையம் 8 மாதமாக திறக்காத அவலம்
குடிநீர் சுத்திகரிப்பு நிலையம் 8 மாதமாக திறக்காத அவலம்
ADDED : ஜூன் 16, 2025 11:34 PM

பொன்னேரி, ஜூன் 17-
தடப்பெரும்பாக்கம் ஊராட்சியில், 10 லட்சம் ரூபாய் செலவில் அமைக்கப்பட்ட குடிநீர் சுத்திகரிப்பு நிலையம் பயன்பாட்டிற்கு வராமல் பணமும், உபகரணங்களும் வீணாகி வருகின்றன.
மீஞ்சூர் ஒன்றியம் தடப்பெரும்பாக்கம் ஊராட்சிக்கு உட்பட்ட திருவேங்கிடபுரம் பகுதியில், குடியிருப்புவாசிகளின் தொடர் கோரிக்கையின் பயனாக, கடந்தாண்டு செப்டம்பர் மாதம், 10 லட்சம் ரூபாய் செலவில், குடிநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைக்கப்பட்டது.
கட்டடம், குடிநீர் தொட்டியில் இருந்து குழாய் பதிப்பு மற்றும் சுத்திகரிப்பிற்கான உபகரணங்கள் ஆகியவை பொருத்தப்பட்டன. அனைத்து பணிகளும் முடிந்து எட்டு மாதங்களான நிலையில், தற்போது வரை திட்டம் பயன்பாட்டிற்கு வராமல் முடங்கி கிடக்கிறது.
திருவேங்கிடபுரம் பகுதியில் நிலத்தடி நீர் உவர்ப்பாக இருப்பதால், குடியிருப்புவாசிகள் ஊராட்சி நிர்வாகம் வழங்கும் தண்ணீரை குடிக்க பயன்படுத்துவதில்லை.
கேன்களில் அடைத்து விற்கப்படும் குடிநீரை வாங்கி பயன்படுத்தி வருகின்றனர்.
இது, குடியிருப்புவாசிகளுக்கு கூடுதல் செலவினங்களை ஏற்படுத்துகிறது. சுத்திகரிப்பு நிலையத்திற்கு, 10 லட்சம் ரூபாய் செலவிட்டும் பயன்பாட்டிற்கு கொண்டு வராமல் இருப்பதால், குடியிருப்புவாசிகள் அதிருப்தி அடைந்துள்ளனர்.
எனவே, மீஞ்சூர் ஒன்றிய நிர்வாகம் ஆய்வு செய்து, குடிநீர் சுத்திகரிப்பு நிலையத்தை உடனடியாக பயன்பாட்டிற்கு கொண்டுவர நடவடிக்கை எடுக்க வேண்டும் என, குடியிருப்புவாசிகள் வலியுறுத்தி உள்ளனர்.