Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/திருவள்ளூர்/ 'மக்களுடன் முதல்வர்' 4ம் கட்டம் 381 முகாம் நடத்த கலெக்டர் உத்தரவு

'மக்களுடன் முதல்வர்' 4ம் கட்டம் 381 முகாம் நடத்த கலெக்டர் உத்தரவு

'மக்களுடன் முதல்வர்' 4ம் கட்டம் 381 முகாம் நடத்த கலெக்டர் உத்தரவு

'மக்களுடன் முதல்வர்' 4ம் கட்டம் 381 முகாம் நடத்த கலெக்டர் உத்தரவு

ADDED : ஜூன் 16, 2025 11:33 PM


Google News
திருவள்ளூர், திருவள்ளூர் மாவட்டத்தில், 'மக்களுடன் முதல்வனர்' நான்காம் கட்டமாக, 381 முகாம் நடத்த கலெக்டர் உத்தரவிட்டுள்ளார்.

திருவள்ளூர் கலெக்டர் அலுவலகத்தில், மக்களுடன் முதல்வர் நான்காம் கட்ட முகாம் ஏற்பாடு குறித்து, அனைத்து துறை அலுவலர்களுடன், கலெக்டர் பிரதாப் நேற்று ஆலோசனை நடத்தினார். அப்போது அவர் கூறியதாவது:

திருவள்ளூர் மாவட்டத்தில் நகராட்சி, மாநகராட்சி, வட்டார வளர்ச்சி மற்றும் பேரூராட்சிகளில் ஜீலை - அக்டோபர் வரை, 381 மக்களுடன் முதல்வர் முகாம் நடத்த வேண்டும்.

முகாம்கள் உரிய நடைமுறைகளின்படி நடைபெறுவதற்காக, துணை கலெக்டர் நிலையிலான அலுவலர்களை 'நோடல்' அலுவலராக நியமனம் செய்ய வேண்டும். முகாம் தளத்தில், முதல் நாளே கணினிகள், 'பிராட்பேண்ட்' இணைப்பு மற்றும் குறைந்தபட்ச வசதிகள் ஏற்படுத்த வேண்டும்.

முகாம்கள் உரிய நடைமுறைகளின்படி நடைபெற ஏதுவாக, முகாம் குழு அலுவலர்கள் நியமனம் செய்ய வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

கூட்டத்தில் ஆவடி மாநகராட்சி கமிஷனர் கந்தசாமி, மாவட்ட வருவாய் அலுவலர் ராஜ்குமார் உள்ளிட்ட பல்வேறு துறை அலுவலர்கள் பங்கேற்றனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us