ADDED : ஜன 29, 2024 06:50 AM
திருவள்ளூர்: திருவள்ளூர் லெட்சுமிபுரம் ஏரிக்கரை பகுதியைச் சேர்ந்தவர் முருகன் மகன் கிரிதரன், 25.
இவர் நேற்று முன்தினம் இரவு சென்னையில் தனியார் கல்லுாரிக்கு சென்ற தன் தங்கையை அழைத்து வர திருவள்ளூரிலிருந்து புறநகர் மின்சார ரயிலில் தன் தந்தையுடன் சென்னைக்கு சென்று கொண்டிருந்தார்.
அப்போது புட்லுார் ரயில் நிலையம் அருகே மின்சார ரயில் சென்றபோது ரயிலிருந்து தவறி விழுந்ததில் பலியானார்.
திருவள்ளூர் ரயில்வே போலீசார் விசாரித்து வருகின்றனர்.