/உள்ளூர் செய்திகள்/திருவள்ளூர்/ மழைநீர் கால்வாய் பால பணி மந்தம் வடக்கு ராஜவீதி மக்கள் கடும் அவதி மழைநீர் கால்வாய் பால பணி மந்தம் வடக்கு ராஜவீதி மக்கள் கடும் அவதி
மழைநீர் கால்வாய் பால பணி மந்தம் வடக்கு ராஜவீதி மக்கள் கடும் அவதி
மழைநீர் கால்வாய் பால பணி மந்தம் வடக்கு ராஜவீதி மக்கள் கடும் அவதி
மழைநீர் கால்வாய் பால பணி மந்தம் வடக்கு ராஜவீதி மக்கள் கடும் அவதி
ADDED : செப் 01, 2025 01:08 AM

திருவள்ளூர்:திருவள்ளூர் நகராட்சிக்கு உட்பட்ட வடக்கு ராஜவீதி சந்திப்பில், மழைநீர் கால்வாய் பால பணி மந்தகதியில் நடந்து வருவதால், பகுதிமக்கள் கடும் அவதிப்பட்டு வருகின்றனர்.
திருவள்ளூர் நகராட்சிக்கு உட்பட்ட வடக்கு ராஜவீதி, தேரடி - ஈக்காடு சாலை சந்திப்பில் இருந்து இடதுபுறம் பிரிந்து செல்கிறது.
இந்த வீதியில் பள்ளி, கடைகள், மருத்துவமனை மற்றும் காய்கறி சந்தை அமைந்துள்ளது.
இந்த வழியாக, பள்ளி மாணவ - மாணவியர், பகுதிமக்கள் உள்ளிட்டோர் சென்று வருகின்றனர். வடக்கு ராஜவீதி - ஈக்காடு சாலை சந்திப்பில், சாலையின் இருபுறமும் மழைநீர் கால்வாய் அமைக்கப்பட்டு உள்ளது.
ஆனால், கழிவுநீர் வெளியேற வழியில்லாததால், குளம்போல் தேங்கி, அப்பகுதியில் துர்நாற்றம் வீசி, நோய்களை பரப்பி வருகிறது.
இதை தொடர்ந்து, நகராட்சி நிர்வாகம், சாலையின் இருபுறமும் மழைநீர் கால்வாய்களை இணைக்கும் வகையில், பாலம் கட்டும் பணியை துவக்கியது.
இப்பணி மந்தகதியில் நடந்து வருவதால், இச்சாலையில் தினமும் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. பள்ளி மாணவ - மாணவியர், தெருவில் வசிப்போர் மற்றும் மார்க்கெட்டிற்கு செல்வோர் கடும் சிரமப்பட்டு வருகின்றனர்.
எனவே, பருவமழைக்கு முன் பாலப் பணியை விரைந்து முடிக்க வேண்டும் என, வடக்கு ராஜவீதி மக்கள், நகராட்சி நிர்வாகத்திற்கு வேண்டுகோள் விடுத்துள்ளனர்.