/உள்ளூர் செய்திகள்/திருவள்ளூர்/ சாலையில் 'மெகா' பள்ளம்: அச்சத்தில் வாகன ஓட்டிகள் சாலையில் 'மெகா' பள்ளம்: அச்சத்தில் வாகன ஓட்டிகள்
சாலையில் 'மெகா' பள்ளம்: அச்சத்தில் வாகன ஓட்டிகள்
சாலையில் 'மெகா' பள்ளம்: அச்சத்தில் வாகன ஓட்டிகள்
சாலையில் 'மெகா' பள்ளம்: அச்சத்தில் வாகன ஓட்டிகள்
ADDED : செப் 01, 2025 01:09 AM

பொன்னேரி:ஆலாடு - வெள்ளக்குளம் சாலையில் 'மெகா' பள்ளம் ஏற்பட்டு சீரமைக்கப்படாமல் இருப்பதால், வாகன ஓட்டிகள் விபத்து அச்சத்தில் சென்று வருகின்றனர்.
மீஞ்சூர் ஒன்றியம் ஆலாடு ஊராட்சிக்கு உட்பட்ட திடீர் நகர் பகுதியில் இருந்து வெள்ளக்குளம் கிராமத்திற்கு செல்லும் ஒன்றிய சாலையில், கால்வாய் பாலத்தை ஒட்டி பெரிய பள்ளம் ஏற்பட்டு உள்ளது.
இப்பகுதியை கடக்கும் வாகன ஓட்டிகள் தடுமாற்றம் அடைகின்றனர். வெள்ளக்குளம், பி.என்.கண்டிகை, கே.என்.கண்டிகை, தேவதானம் ஆகிய கிராமங்களைச் சேர்ந்த மக்கள், அத்தியாவசிய தேவைகளுக்கு பொன்னேரி வந்து செல்ல, இச்சாலையை பயன்படுத்தி வருகின்றனர்.
இந்த வழியாகச் செல்லும் இருசக்கர வாகன ஓட்டிகள், சாலையில் உள்ள பெரிய பள்ளத்தால் விபத்தில் சிக்கும் அபாயம் உள்ளது.
இது குறித்து வாகன ஓட்டிகள் கூறியதாவது:
பள்ளம் நாளுக்கு நாள் பெரிதாகி வருகிறது. சாலையின் அடிப்பகுதியில் மண் அரிப்பு ஏற்பட்டுள்ளது. அடுத்த சில நாட்களில் நெல் அறுவடை பணி துவங்க உள்ளது.
அதிக சுமையுடன் லாரிகள், அறுவடை இயந்திரங்கள் செல்லும்போது, பாரம் தாங்காமல் சாலை முழுதுமாக உள்வாங்கும் நிலை உள்ளது. எனவே, அசம்பாவிதங்கள் ஏற்படும் முன், மீஞ்சூர் ஒன்றிய நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.