/உள்ளூர் செய்திகள்/திருவள்ளூர்/ நெல் கொள்முதல் செய்யாமல் இழுத்தடிப்பு ஆளுங்கட்சியினர் தலையீடால் அவதி நெல் கொள்முதல் செய்யாமல் இழுத்தடிப்பு ஆளுங்கட்சியினர் தலையீடால் அவதி
நெல் கொள்முதல் செய்யாமல் இழுத்தடிப்பு ஆளுங்கட்சியினர் தலையீடால் அவதி
நெல் கொள்முதல் செய்யாமல் இழுத்தடிப்பு ஆளுங்கட்சியினர் தலையீடால் அவதி
நெல் கொள்முதல் செய்யாமல் இழுத்தடிப்பு ஆளுங்கட்சியினர் தலையீடால் அவதி
ADDED : மே 30, 2025 02:17 AM

திருவாலங்காடு:திருவாலங்காடு ஒன்றியம் அரும்பாக்கம், பனப்பாக்கம், நெடும்பரம், முத்துக்கொண்டாபுரம் உட்பட பல்வேறு ஊராட்சிகளில் 10 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் நெல் விவசாயம் செய்து வருகின்றனர்.
நவரை பருவத்தில் அறுவடை செய்த நெல்லை விவசாயிகள் அலைச்சல் இன்றி விற்பனை செய்ய மாவட்ட நிர்வாகம் பனப்பாக்கத்தில் நெல் கொள்முதல் நிலையத்தை திறந்துள்ளது.
கடந்த ஒருவாரமாக நெல் கொள்முதல் நிலையத்தில் விவசாயிகளிடம் இருந்து நெல் பெறப்படவில்லை. இதனால் பனப்பாக்கம் சாலையில் நெல் மூட்டைகளை ஏற்றி வந்த டிராக்டர்கள் அணிவகுத்து நிற்கின்றன. கனகம்மாசத்திரம் சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த சில நாட்களாக மழை பெய்து வருவதால் நெல் மூட்டைகள் நனைந்து வீணாகும் அபாயம் உள்ளதால் தார்ப்பாய் மூடி விவசாயிகள் நெல்லை பாதுகாத்து வருகின்றனர்.
இதுகுறித்து விவசாயிகள் கூறியதாவது:
பனப்பாக்கம் நெல் கொள்முதல் நிலையத்தில் ஒரு நெல் மூட்டைக்கு 50 ரூபாய் பணத்தை ஊழியர்கள் வசூலிக்கின்றனர்.
ஆன்லைன் மூலம் விவசாயிகளின் நெல் மூட்டைகளை முறையாக பதிவு செய்யாமல், அரசியல் கட்சி நிர்வாகிகளுக்கு வேண்டப்பட்டவர்களின் நெல் மூட்டைகள் மட்டும் கொள்முதல் செய்யப்படுகிறது.
மழையில் நெல் மூட்டைகள் நனைந்தால் விவசாயிகளுக்கு பெரும் நஷ்டம் ஏற்படும். இரவில் நெல் மூட்டைகள் லாரி வாயிலாக ஏற்றிச்செல்லப்படுகிறது.
ஆனால் எங்களிடம் நிலையத்தில் நெல் மூட்டைகளை வைக்க இடம் இல்லை என காரணம் கூறி நெல்லை வாங்க மறுக்கின்றனர். விவசாயிகளுக்கு எதிராக நடத்தப்படும் இந்த நெல் கொள்முதல் நிலையம் மீது கலெக்டர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.