ADDED : மே 30, 2025 02:13 AM
சோழவரம்:சோழவரம் ஒன்றியத்திற்கு உட்பட்ட ஒரக்காடு கிராமத்தில் சுகாதாரமற்ற குடிநீர், அரசு நிலம் ஆக்கிரமிப்பு உள்ளிட்ட பிரச்னைகளை வலியறுத்தி, நேற்று கிராமவாசிகள் பி.டி.ஓ., அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
சோழவரம் பி.டி.ஓ., அலுவலக அதிகாரிகள் மற்றும் காவல்துறையினர் பேச்சு நடத்தினர். கிராமவாசிகளின் கோரிக்கைகள் தொடர்பாக விரைவில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தனர். அதை தொடர்ந்து கிராமவாசிகள் கலைந்து சென்றனர்.