/உள்ளூர் செய்திகள்/திருவள்ளூர்/' ரோடு ரோலர் ' ஏறி டிரைவர் பரிதாப பலி' ரோடு ரோலர் ' ஏறி டிரைவர் பரிதாப பலி
' ரோடு ரோலர் ' ஏறி டிரைவர் பரிதாப பலி
' ரோடு ரோலர் ' ஏறி டிரைவர் பரிதாப பலி
' ரோடு ரோலர் ' ஏறி டிரைவர் பரிதாப பலி
ADDED : ஜன 07, 2024 12:59 AM
பெரியபாளையம்:திருவள்ளூர் மாவட்டம் பெரியபாளையம் அருகே, கரிக்கலவாக்கம் கிராமத்தில் தனியார் கம்பெனியில், கட்டுமான பணி நடந்து வருகிறது.
அங்கு விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் அருகே, மொளசூரைச் சேர்ந்த சக்தி, 37, என்பவர், நேற்று ரோடு ரோலர் வாகனத்தை இயக்கும் போது தடுமாறி கீழே விழுந்தார்.
இதில், வாகனத்தின் பின்பக்க சக்கரம் சக்தி மீது ஏறியதில் பலத்த காயம் அடைந்தார். அவரை திருவள்ளூர் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு பரிசோதித்த மருத்துவர்கள், சக்தி இறந்து விட்டதாக கூறினர்.
இதுகுறித்து வெங்கல் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.