குழந்தையுடன் 'லூடோ கேம்' விளையாடிய ராகுல்: புகைப்படம் வைரல்
குழந்தையுடன் 'லூடோ கேம்' விளையாடிய ராகுல்: புகைப்படம் வைரல்
குழந்தையுடன் 'லூடோ கேம்' விளையாடிய ராகுல்: புகைப்படம் வைரல்
ADDED : ஜூலை 10, 2024 10:22 AM

லக்னோ: ரேபரேலியில் குழந்தையுடன் காங்கிரஸ் எம்.பி ராகுல் லூடோ கேம் விளையாடும் புகைப்படம் சமூகவலைதளத்தில் வைரலாகி வருகிறது.
ரேபரேலி லோக்சபா தொகுதியில் வெற்றிப்பெற்ற காங்., எம்.பி., ராகுல், நேற்று (ஜூலை 9) அங்குள்ள எய்ம்ஸ் மருத்துவமனையில், சிகிச்சை பெற்று வந்த நோயாளிகளை சந்தித்து ஆறுதல் தெரிவித்தார்.
அப்போது ஒரு கட்டிலில் சிகிச்சை பெற்றுக் கொண்டிருந்த குழந்தை, செல்போனில் லூடோ கேம் விளையாடிக் கொண்டிருந்தது. இதனை கவனித்த ராகுல், குழந்தையிடம் நலம் விசாரித்ததுடன், சிறிது நேரம் லூடோ கேம் விளையாடினார். இந்த புகைப்படங்கள் சமூக வலைதளத்தில் அதிகம் பகிரப்பட்டு வருகிறது.