Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/திருவள்ளூர்/வீரராகவர் கோவிலில் தை பிரம்மோற்சவம்

வீரராகவர் கோவிலில் தை பிரம்மோற்சவம்

வீரராகவர் கோவிலில் தை பிரம்மோற்சவம்

வீரராகவர் கோவிலில் தை பிரம்மோற்சவம்

ADDED : ஜன 29, 2024 06:57 AM


Google News
திருவள்ளூர்: திருவள்ளூர் வீரராகவர் கோவிலில் தை பிரம்மோற்சவம் வரும், பிப்., 4ல் துவங்கி 10 நாட்கள் நடைபெறுகிறது.

திருவள்ளூர் வீரராகவர் கோவிலில் ஆண்டுக்கு இரு பிரம்மோற்சவங்கள் நடைபெறுகிறது. தை அமாவாசை அன்று சாலிஹோத்ர மகரிஷிக்கு வீரராகவர் காட்சியளித்த தினம் என்பதால் தை பிரம்மோற்சவம் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.

இந்த ஆண்டிற்கான தை பிரம்மோற்சவம், பிப்.,4 கொடியேற்றத்துடன் துவங்கி, வரும் 13ம் தேதியுடன் நிறைவடைகிறது.

உற்சவம் விபரம்:

நாள்- விசேஷம்

பிப்.,4- கொடியேற்றம், காலை 5:15 மணி, தங்க சப்பரம் காலை 7:00 மணி, சிம்மவாகனம், இரவு 7:00 மணி

பிப்.,5 - ஹம்ஸ வாகனம், காலை 7:30 மணி, சூரிய பிரபை, இரவு 7:00 மணி

பிப்.,6- கருட சேவை, கோபுர தரிசனம் காலை 5:00 மணி, திருவீதி புறப்பாடு காலை 7:00 மணி, ஹனுமந்த வாகனம், இரவு 8:00 மணி

பிப்.,7- சேஷ வாகனம், காலை 7:00 மணி, சந்திர பிரபை, இரவு 7:00 மணி

பிப்.,8- நாச்சியார் திருக்கோலம் காலை 5:00 மணி, யாளி வாகனம் இரவு 7:00

பிப்.,9- தை அமாவாசை, ரத்னாங்கி சேவை, காலை 5:00-12:00 மணி வரை. சூர்ணாபிஷேகம் மாலை 3:30 மணி, வேணுகோபாலன் திருக்கோலம் வெள்ளிச்சப்பரம்-மாலை 4:30 மணி. யானை வாகனம் இரவு 8:30 மணி

பிப்.,10- தேர் புறப்பாடு காலை 7:00 மணி, திருமஞ்சனம்-மாலை 6:30 மணி, கோவிலுக்கு எழுந்தருளல் இரவு 9:00 மணி.

பிப்.,11- திருப்பாதம் சாடி திருமஞ்சனம், மாலை 3:30 மணி, குதிரை வாகனம், இரவு 7:30 மணி

பிப்.,12- ஆள்மேல் பல்லக்கு, காலை 5:00 மணி, தீர்த்தவாரி, காலை 11:00 மணி, விஜயகோடி விமானம், இரவு 7:00 மணி

பிப்.,13- த்வாதச ஆராதனம், மதியம் 12.030 மணி, வெட்டிவேர் சப்பரம், இரவு 8:00 மணி, த்வஜ அவரோஹணம் -கொடியிறக்கம் இரவு 10.00 மணி.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us