/உள்ளூர் செய்திகள்/திருவள்ளூர்/ பஸ் கண்ணாடி உடைப்பு மாணவர்கள் கைது பஸ் கண்ணாடி உடைப்பு மாணவர்கள் கைது
பஸ் கண்ணாடி உடைப்பு மாணவர்கள் கைது
பஸ் கண்ணாடி உடைப்பு மாணவர்கள் கைது
பஸ் கண்ணாடி உடைப்பு மாணவர்கள் கைது
ADDED : மார் 21, 2025 11:55 PM
திருத்தணி,
திருவாலங்காடு ஒன்றியம் அருங்குளம் கிராமத்தில் இருந்து அரசு பேருந்து, நேற்று மாலை திருத்தணி பேருந்து நிலையத்தை நோக்கி சென்று கொண்டிருந்தது. இதில் பள்ளி, கல்லூரி மாணவர்கள் அதிகளவில் பயணம் செய்தனர்.
மாணவர்கள் பேருந்து படிக்கட்டில் பயணம் செய்ததை நடத்துனர் தட்டிக் கேட்டுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த மாணவர்கள், டாக்டர் ராதாகிருஷ்ணன் பள்ளி அருகே பேருந்து நின்றபோது, பேருந்தில் இருந்து இறங்கிய மாணவர்கள் சிலர், பேருந்தின் பின்பக்க கண்ணாடியை கல்லால் அடித்து நொறுக்கி விட்டு தப்பிச் சென்றனர்.
இதுகுறித்து, திருத்தணி போலீசார் விசாரணை செய்து, பிளஸ் 1 படிக்கும் இரண்டு மாணவர்களை கைது செய்து விசாரிக்கின்றனர்.