/உள்ளூர் செய்திகள்/திருவள்ளூர்/ அனுமதி சீட்டு இல்லாமல் கனிமவளம் கொண்டு சென்றால் கடும் நடவடிக்கை அனுமதி சீட்டு இல்லாமல் கனிமவளம் கொண்டு சென்றால் கடும் நடவடிக்கை
அனுமதி சீட்டு இல்லாமல் கனிமவளம் கொண்டு சென்றால் கடும் நடவடிக்கை
அனுமதி சீட்டு இல்லாமல் கனிமவளம் கொண்டு சென்றால் கடும் நடவடிக்கை
அனுமதி சீட்டு இல்லாமல் கனிமவளம் கொண்டு சென்றால் கடும் நடவடிக்கை
ADDED : மார் 25, 2025 10:26 PM
திருவள்ளூர்:வாகனங்களில் அனுமதி சீட்டு இன்றி, கனிமவளம் கொண்டு சென்றால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என, கலெக்டர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
கலெக்டர் பிரதாப் விடுத்துள்ள செய்திக்குறிப்பு:
திருவள்ளுர் மாவட்டத்தில் ஆர்.கே.பேட்டை, பள்ளிப்பட்டு மற்றும் திருத்தணி வட்டங்களில் செயல்பட்டு வரும் கல்குவாரி மற்றும் கிராவல் மண் குவாரிக்கு குத்தகை உரிமம் வழங்கப்பட்டுள்ளது. இந்த குவாரிகளிலிருந்து வெட்டி எடுக்கப்படும் கனிமங்களை, வாகனங்களில் வெளியே எடுத்துச் செல்ல அனுமதி சீட்டு, இணையதளம் வாயிலாக வழங்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில். வாகனங்களில் ஏற்றிச் செல்லும் கனிமங்களை கண்காணிக்கவும், அனுமதி வழங்கப்பட்டுள்ள அளவிற்கு கூடுதலாக கனிமம் எடுத்துச் செல்வதை தடுக்கவும், இம்மாதம் முதல் வாகனங்களுக்கான நடை சீட்டும், 'இ பெர்மிட்' வாயிலாக வழங்கப்பட்டு வருகிறது.
குத்தகைதாரர்கள் உரிமம் வழங்கப்பட்ட பகுதியில், விதிமுறைக்கு உட்பட்டு குவாரி பணி மேற்கொள்ள வேண்டும். வாகன ஓட்டுநர்கள் குவாரியிலிருந்து கனிமங்கள் ஏற்றிச் செல்லும் போது உரிய அனுமதி சீட்டும், நடைச்சீட்டும் வைத்திருக்க வேண்டும்.
அனுமதியில்லாமல் குவாரி பணி மேற்கொள்வது மற்றும் கனிமங்கள் எடுத்துச் சென்றால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.