/உள்ளூர் செய்திகள்/திருவள்ளூர்/ வழிகேட்பது போல் நடித்து மொபைல்போன் வழிப்பறி வழிகேட்பது போல் நடித்து மொபைல்போன் வழிப்பறி
வழிகேட்பது போல் நடித்து மொபைல்போன் வழிப்பறி
வழிகேட்பது போல் நடித்து மொபைல்போன் வழிப்பறி
வழிகேட்பது போல் நடித்து மொபைல்போன் வழிப்பறி
ADDED : மார் 25, 2025 10:27 PM
பொதட்டூர்பேட்டை:பொதட்டூர்பேட்டையைச் சேர்ந்தவர் தேவராஜ், 35. இவருக்கு, பாண்டரவேடு அருகே கோழிப்பண்ணை உள்ளது. நேற்று முன்தினம் இரவு கோழிப்பண்ணையில் இருந்து வீட்டிற்கு நடந்து சென்று கொண்டிருந்தார்.
பொதட்டூர்பேட்டை சுடுகாடு அருகே வந்த போது, அந்த வழியாக இருசக்கர வாகனத்தில் வந்த மூன்று பேர், தேவராஜிடம் ‛பள்ளிப்பட்டுக்கு செல்லும் வழி எது' என, விசாரித்துள்ளனர்.
அப்போது, தேவராஜை கத்தியால் தாக்கிவிட்டு, மொபைல்போனை பறித்துவிட்டு தப்பினர். இதில், தேவராஜ் படுகாயமடைந்தார். அக்கம்பக்கத்தினர் தேவராஜை மீட்டு, பொதட்டூர்பேட்டை மருத்துவமனையில் சேர்த்தனர். இதுகுறித்து பொதட்டூர்பேட்டை போலீசார் விசாரித்து வருகின்றனர்.