/உள்ளூர் செய்திகள்/திருவள்ளூர்/ தெரு நாய்கள் தொல்லை கீழ்மணம்பேடு மக்கள் அவதி தெரு நாய்கள் தொல்லை கீழ்மணம்பேடு மக்கள் அவதி
தெரு நாய்கள் தொல்லை கீழ்மணம்பேடு மக்கள் அவதி
தெரு நாய்கள் தொல்லை கீழ்மணம்பேடு மக்கள் அவதி
தெரு நாய்கள் தொல்லை கீழ்மணம்பேடு மக்கள் அவதி
ADDED : ஜூன் 11, 2025 09:40 PM
கீழ்மணம்பேடு:திருமழிசை அடுத்துள்ள பூந்தமல்லி ஒன்றியத்துக்குட்பட்ட கீழ்மணம்பேடு ஊராட்சியில் தெரு நாய்கள் தொல்லை அதிகரித்து விட்டது. இதைக் கட்டுப்படுத்த ஊராட்சி நிர்வாகம் முறையான நடவடிக்கை எடுக்கவில்லை என, பகுதிவாசிகள் குற்றஞ் சாட்டுகின்றனர்.
இந்த நாய்கள், கூட்டம் கூட்டமாக நெடுஞ்சாலை மற்றும் குடியிருப்பு பகுதிகளில் உள்ள சாலையில் நடந்து செல்லும் பகுதிவாசிகள் மற்றும் பள்ளி செல்லும் மாணவ, மாணவியர், குழந்தைகளை துரத்துவது, உணவை தேடி அங்கும், இங்கும் ஓடுவது என, தொடர்ந்து நாய்கள், பொதுமக்களுக்கு பெரும் அச்சத்தை ஏற்படுத்தி வருகின்றன.
கடந்த இரு தினங்களுக்கு முன் இப்பகுதியில் உள்ள அரசு பள்ளிக்கு செல்லும் மாணவியர் ஆறு பேர் உட்பட பள்ளி துாய்மை பணியாளர் ஒருவரையும் நாய்கள் கடித்துள்ளன.
இதனால் இப்பகுதிவாசிகள் கடும் அச்சத்துடன் உள்ளனர். எனவே, மாவட்ட நிர்வாகம் சாலையில் சுற்றித் திரியும் நாய்களை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என, கீழ்மணம்பேடு பகுதிவாசிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.