/உள்ளூர் செய்திகள்/திருவள்ளூர்/ பூவலம்பேடு துணை மின் நிலையம் விரைந்து செயல்படுத்த கோரிக்கை பூவலம்பேடு துணை மின் நிலையம் விரைந்து செயல்படுத்த கோரிக்கை
பூவலம்பேடு துணை மின் நிலையம் விரைந்து செயல்படுத்த கோரிக்கை
பூவலம்பேடு துணை மின் நிலையம் விரைந்து செயல்படுத்த கோரிக்கை
பூவலம்பேடு துணை மின் நிலையம் விரைந்து செயல்படுத்த கோரிக்கை
ADDED : ஜூன் 11, 2025 09:38 PM
கும்மிடிப்பூண்டி:பஞ்செட்டி துணை மின் நிலையத்தின் கீழ், கவரைப்பேட்டை அடுத்த பூவலம்பேடு மின் பொறியாளர் அலுவலகம் இயங்கி வருகிறது. இங்கிருந்து குருவராஜ கண்டிகை, பில்லாக்குப்பம், பாத்தப்பாளையம் உள்ளிட்ட, 25 கிராமங்களுக்கு மின் வினியோகம் செயயப்பட்டு வருகிறது.
கிராம பகுதிகளில், மின் பயன்பாடு நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால், ஆறு ஆண்டுகளாக, மின் பற்றாக்குறை ஏற்பட்டு, குறைந்த அழுத்த மின்சாரம் வினியோகிக்கப்பட்டு வருவதாக கிராம மக்கள் தெரிவிக்கின்றனர்.
இதையடுத்து பூவலம்பேடு கிராமத்தில் துணை மின் நிலையம் அமைப்பது என, வடசென்னை மின் பகிர்மான வட்டம் சார்பில், முடிவு எடுக்கப்பட்டது.
அதற்காக, பூவலம்பேடு அருகே உள்ள அமிர்தமங்களம் கிராமத்தில், மூன்று ஆண்டுகளுக்கு முன் நிலம் ஒதுக்கப்பட்டது. ஆனால் இதுநாள் வரை துணை மின் நிலையம் அமைக்காமல், மின்வாரியம் அலட்சியம் செய்து வருகிறது. மேலும் தாமதிக்காமல் உடனடியாக பூவலம்பேடு துணை மின் நிலையம் அமைக்க துரித நடவடிக்கை எடுக்க வேண்டும் என, அப்பகுதியினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.