/உள்ளூர் செய்திகள்/திருவள்ளூர்/ கும்மிடியில் இருளில் மூழ்கும் சார் - பதிவாளர் அலுவலகம் கும்மிடியில் இருளில் மூழ்கும் சார் - பதிவாளர் அலுவலகம்
கும்மிடியில் இருளில் மூழ்கும் சார் - பதிவாளர் அலுவலகம்
கும்மிடியில் இருளில் மூழ்கும் சார் - பதிவாளர் அலுவலகம்
கும்மிடியில் இருளில் மூழ்கும் சார் - பதிவாளர் அலுவலகம்
ADDED : ஜூன் 13, 2025 08:09 PM
கும்மிடிப்பூண்டி:சென்னை - கொல்கட்டா தேசிய நெடுஞ்சாலையோரம், கும்மிடிப்பூண்டி தாசில்தார் அலுவலகம் அருகே சார் - பதிவாளர் அலுவலகம் அமைந்துள்ளது. விஷேச நாட்களிலும், சர்வர் சேவை பாதிக்கும் போதும், இரவு 8:00 மணி வரை பத்திரப்பதிவு நடைபெறுவதாக கூறப்படுகிறது.
இந்த சூழலில், சார் - பதிவாளர் அலுவலகத்தில் தடையின்றி மின் வினியோகம் பெறும் வசதி ஏற்படுத்தவில்லை. அங்குள்ள கணினிகள் மட்டும் யூ.பி.எஸ்.,சில் வேலை செய்கின்றன.
பகல் நேரத்தில் மின்வெட்டு ஏற்படும் போதும், மின் விசிறி வசதியின்றி அலுவலர்களும், பதிவுக்கு வருவோரும் சிரமத்திற்கு ஆளாகின்றனர். கணினி கேமரா வாயிலாக புகைப்படம் எடுக்க வருவோரின் முகத்தில் மொபைல்போன் வாயிலாக 'டார்ச் லைட்'டை அடித்து, படம் எடுக்க வேண்டிய அவலநிலையில், சார் - பதிவாளர் அலுவலகம் இயங்கி வருகிறது.
மாலை நேரத்திற்கு பின் மின்வெட்டு ஏற்படும் போது, சார் - பதிவாளர் அலுவலகம் இருளில் மூழ்கும் நிலை ஏற்படுகிறது. இதனால், அங்கு பணத்துடன் காத்திருப்போர் அச்சம் அடைகின்றனர்.
எனவே, பொதுமக்களின் பாதுகாப்பு கருதி, உடனடியாக கும்மிடிப்பூண்டி சார் - பதிவாளர் அலுவலகத்தில் தடையின்றி மின் வினியோகம் பெறும் வசதியை ஏற்படுத்த வேண்டும் என, சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.