/உள்ளூர் செய்திகள்/திருவள்ளூர்/புதரால் குறுகிய நெடுஞ்சாலை வாகன ஓட்டிகள் தவிப்புபுதரால் குறுகிய நெடுஞ்சாலை வாகன ஓட்டிகள் தவிப்பு
புதரால் குறுகிய நெடுஞ்சாலை வாகன ஓட்டிகள் தவிப்பு
புதரால் குறுகிய நெடுஞ்சாலை வாகன ஓட்டிகள் தவிப்பு
புதரால் குறுகிய நெடுஞ்சாலை வாகன ஓட்டிகள் தவிப்பு
ADDED : ஜன 07, 2024 01:36 AM

ஆர்.கே.பேட்டை:ஆர்.கே.பேட்டையில் இருந்து சோளிங்கர் செல்லும் நெடுஞ்சாலையில், பில்லாஞ்சி ஏரிக்கரையை ஒட்டி சாலையோரம் புதர் மண்டியுள்ளதால், சாலையின் அகலம் குறைந்து உள்ளது.
இதனால், எதிரெதிரே வாகனங்கள் வரும் போது அவற்றுக்கு வழிவிட்டு ஒதுங்க இருசக்கர வாகன ஓட்டிகளுக்கு போதிய இடம் இருப்பது இல்லை. இதனால், நான்கு சக்கர வாகனங்களை உரசியபடியே பயணிக்க வேண்டிய நிலை உள்ளது.
வேகமாக செல்லும் வாகனங்கள் ஒன்றுடன் ஒன்று உரசி விபத்து நேரிடும் அபாயம் இருப்பதுடன், சாலையோரம் புதர் மண்டிய பகுதியில் வாகனங்கள் பயணிக்க முடியாத நிலை உள்ளது.
புதருக்கு நடுவே ஏராளமன விளம்பர பதாகைகள் நடப்பட்டுள்ளன. இவற்றுக்கு நடுவே, வாகன ஓட்டிகளின் பார்வைக்கு புலப்படாமல் மைல் கற்களும் உள்ளன.
இந்த ஏரிக்கரை பகுதியில், ஆதிவராகபுரம் கூட்டு சாலைக்கு திரும்பும் வாகனங்கள், திடீரென தார் சாலையில் நின்று திரும்பும் போது, அந்த வாகனங்களுக்கு பின்னால் வரும் வாகனங்கள் மோதி விபத்து நேரிடுகிறது.
வாகன ஓட்டிகளின் பாதுகாப்பு கருதி, சாலையோர புதரை அகற்றி, நெடுஞ்சாலைக்கு உரிய இடத்தை சுத்தம் செய்தால், வாகன ஓட்டிகள், ஓரமாக நின்று, வாகனங்களை கவனித்து சாலையை கடக்க முடியும்.
விபத்துகள் நேரிடாது என சமூக ஆர்வலர்கள் எதிர்பார்க்கின்றனர்.