/உள்ளூர் செய்திகள்/திருவள்ளூர்/செடிகள் முளைத்து பாழாகும் கழிவுநீர் கால்வாய்செடிகள் முளைத்து பாழாகும் கழிவுநீர் கால்வாய்
செடிகள் முளைத்து பாழாகும் கழிவுநீர் கால்வாய்
செடிகள் முளைத்து பாழாகும் கழிவுநீர் கால்வாய்
செடிகள் முளைத்து பாழாகும் கழிவுநீர் கால்வாய்
ADDED : பிப் 24, 2024 10:02 PM

திருவாலங்காடு:திருவாலங்காடு ஊராட்சி பராசக்தி நகரில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். இங்குள்ள தெருவில் கழிவுநீர் கால்வாயில் செடிகள் முளைத்து பாழடைந்து வருகிறது.
இதனால் கழிவுநீர் செல்ல வழியின்றி குடியிருப்பு அருகே, கழிவுநீர் தேங்கி அதில் உருவாகும் கொசுக்கள் கடிப்பதால் நோய் தொற்றுக்கு உள்ளாகி வருவதாக அப்பகுதியினர் வேதனை தெரிவிக்கின்றனர்.
இந்நிலையில் கழிவுநீர் கால்வாயில் முளைத்துள்ள செடிகளை அகற்றி சீரமைக்க சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, அப்பகுதிவாசிகள் எதிர்பார்க்கின்றனர்.