ADDED : மே 20, 2025 05:22 AM

குவஹாத்தி: இந்திய ராணுவத்தின், 'ஆப்பரேஷன் சிந்துார்' நடவடிக்கைக்கு பின், சில விஷமிகள் வேண்டு மென்றே மத்திய அரசுக்கு எதிரான பொய்யான தகவல்களை சமூக வலைதளங்களில் பரப்பி வருகின்றனர்.
பாகிஸ்தானுக்கு ஆதரவான கருத்துக்களையும் பதிவிட்டு வருகின்றனர்.
இதையடுத்து, சமூக வலைதளங்களில் பொய் பிரசாரம் செய்வோருக்கு எதிராக அசாம் அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது.
இதன்படி, தேச விரோத நடவடிக்கைகளில் ஈடுபட்டதாக அசாமில், 71 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர்.
பா.ஜ., மூத்த தலைவரும், அசாம் முதல்வருமான ஹிமந்த பிஸ்வ சர்மா கூறுகையில், “சமூக வலைதள பதிவுகளை போலீசார் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர். இதன் அடிப்படையில், 71 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்,'' என்றார்.