/உள்ளூர் செய்திகள்/திருவள்ளூர்/ ரூ.2.38 லட்சம் பட்டாசு மாயம் காவலாளி கைது; மூவருக்கு வலை ரூ.2.38 லட்சம் பட்டாசு மாயம் காவலாளி கைது; மூவருக்கு வலை
ரூ.2.38 லட்சம் பட்டாசு மாயம் காவலாளி கைது; மூவருக்கு வலை
ரூ.2.38 லட்சம் பட்டாசு மாயம் காவலாளி கைது; மூவருக்கு வலை
ரூ.2.38 லட்சம் பட்டாசு மாயம் காவலாளி கைது; மூவருக்கு வலை
ADDED : செப் 20, 2025 09:53 PM
ஊத்துக்கோட்டை:பெரியபாளையம் அருகே பட்டாசு குடோனில், 2.38 லட்சம் ரூபாய் மதிப்புள்ள பட்டாசு திருடிய காவலாளியை போலீசார் கைது செய்தனர்.
சென்னை, கொரட்டூரைச் சேர்ந்தவர் செல்லத்துரை பாண்டியன், 52. இவர், மெய்யூர் அடுத்த சோமதேவன்பட்டு கிராமத்தில் உள்ள
தன் பட்டாசு குடோனில், தீபாவளியை ஒட்டி, 30 லட்சம் ரூபாய் மதிப்புள்ள பட்டாசுகளை இருப்பு வைத்திருந்தார்.
இங்கு, காவலாளியாக தேவந்தவாக்கம் கிராமத்தைச் சேர்ந்த சத்யா, 57, பணியாற்றி வந்தார். நேற்று, செல்லத்துரை பாண்டியன் குடோனை பார்வையிட்டார்.
அப்போது, 2.38 லட்சம் ரூபாய் மதிப்புள்ள பட்டாசு காணாமல் போனது தெரிந்தது. இதுகுறித்த புகாரின்படி, பெரியபாளையம் போலீசார் சத்யாவை விசாரித்தனர். விசாரணையில், கூட்டாளிகள் மூன்று பேருடன் பட்டாசு திருடியதை ஒப்புக்கொண்டார். பின், திருடு போன பட்டாசு மீட்கப்பட்டது.
இதுகுறித்து, பெரியபாளையம் போலீசார் வழக்குப் பதிந்து, சத்யாவை கைது செய்து, சிறையில் அடைத்தனர். மேலும், மூன்று பேரை தேடி வருகின்றனர்.